Home
News

OTT சந்தா வழங்கும் ஜியோவின் டேட்டா பேக்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. யாரு விடுவா?

ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். எனவே தான் பல்வேறு மக்கள் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ஓடிடி சந்தா வழங்கும் டேட்டா பேக் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களில் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

OTT சந்தா வழங்கும் ஜியோவின் டேட்டா பேக்.. 90 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.100 டேட்டா பேக் (jio rs 100 data pack) ஆனது மொத்தமாக 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் 3 மாதங்களுக்கான அல்லது 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்க.

ஜியோ ரூ.175 டேட்டா பேக் (jio rs 175 data pack) ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி, சௌபால், ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி போன் ஓடிடி சந்தாக்களை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

அதேபோல் ஜியோ ரூ.175 டேட்டா பேக் கூட வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்காது. குறிப்பாக ஓடிடி நன்மைகளை இந்த டேட்டா பேக் திட்டங்கள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஓடிடி நன்மைகளுடன் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளை பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio data packs that offer OTT subscription: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X