Home
News

ஜியோ அதிரடி: திடீரென தினசரி 2ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்கள் மற்றும் சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் சில திட்டங்கள் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ டேட்டா பேக்

ஜியோ டேட்டா பேக்

இந்நிலையில் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது, அது என்னவென்றால், ஒரு ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்கும் 'ஜியோ டேட்டா பேக்" என்கிற இலவச டேட்டா சலுகையை மீண்டும் கொண்டுவந்துள்ளது இந்நிறுவனம்.

அது ஏப்ரல் 1வரை

இதற்குமுன்பு ஃப்ரீ பேக் மார்ச் மாத இறுதியில் எந்த அறிவிப்பும் இன்றி பயனர்களின் அக்கவுண்ட்களில் வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, அது ஏப்ரல் 1வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 முறை திட்டத்தைக்

இப்போது ஜியோ மீண்டும் ஒரு முறை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, அதாவது ஜியோ ப்ரீபெயிட் பயனர்களின் டேட்டாபேக்கின் மீது கூடுதல் 2ஜபி அளவிலாக டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கிடைக்குமா? இல்லையா? எ

எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலில் மை பிளான்ஸ் பிரிவில் இந்த சலுகையைப் பெறலாம். மேலும் ஜியோ நிறுவனம் சலுகையை தோராயமாக வழங்குகிறது என்பதால், நீங்கள் இந்த இலவச சலுகையை பெறலாம் அல்லது பெறாமல் கூட போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதி செய்யவேண்டும் என்றால், ஜியோ செயலியில் சென்று உங்களுக்கு கிடைக்குமா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளவும்.

 இலவச டேட்டா பேக்

மேலும் சில அக்கவுண்ட்களில் ஏப்ரல் 27 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளன, எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமேஇலவச டேட்டா பேக் கிடைக்கும் என்று அர்த்தம், அதாவது மே1 வரை செல்லுபடியாகும், ஒருவேளை ஏப்ரல் 28 அன்று
வரவு வைக்கப்பட்டலாம், மே 2வரை இந்த இலவச டேட்டா பேக் செல்லுபடியாகும்.

இலவச டேட்டாவானது

குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்ட இந்த சலுகையின் கீழ் கிடைக்கும் இலவச டேட்டாவானது உங்களிடம் ஆக்டிவ் ஆகஇருக்கும் டேட்டா பேக்கின் டேட்டா நன்மைகளுடன் சேர்க்கப்படும், இந்த இடத்தில் உங்கள் ஆக்டிவ் பிளானின் டேட்டா நன்மை தீர்ந்த பிறகு மட்டுமே இதை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜிபி டேட்டா

ஒரு உதரணம் கூறவேண்டும் என்றால், நீங்கள் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஒவ்வொரு நாளும் 5ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் 2ஜிபி கூடுதல் இலவச டேட்டா நன்மைகளுடன் சேர்த்து மொத்தம் 5ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள்.

2ஜிபி டேட்டாவை

அதாவது ஆக்டிவ் பிளானின் 3ஜிபி டேட்டா முடிந்த பிறகு மட்டும் மீதுமுள்ள 2ஜிபி டேட்டாவை நீஙக்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Data Pack Offers 2GB Daily Data with 4 Days Validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X