Home
News

மாஸ் காட்டிய Jio.. 200 ரூபாய் விலை புள்ளியில் தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்.. SMS.. கூடுதலா இலவச நன்மையுமா?

யாருக்கு லக் அடித்ததோ இல்லையோ தெரியலை, ஆனால், ஜியோ (Jio) பயனர்களின் காட்டில் டேட்டா மழை கொட்டித்தீர்க்கிறது. ஆம், ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அதிக டேட்டா நன்மை கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இப்போது வழங்க துவங்கியுள்ளது. தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 2ஜிபி டேட்டா போதாத வடிக்கையாளர்களுக்காவே 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ வழங்கி வருகிறது. அந்த திட்டங்களின் விலை என்ன? இத்துடன் கிடைக்கும் எக்ஸ்ட்ரா நன்மை என்ன என்ற விபரத்தை இப்போது பார்க்கலாம்.

பொதுவாகவே, மக்கள் எப்போதும் ரீசார்ஜ் செய்வதற்கு முன்பாக எந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் (Extra Benefits) கிடைக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூரித்து செய்யும், ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முயல்கிறாரகள். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூரித்து செய்ய ஜியோ தற்போது பல புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.

மாஸ் காட்டிய Jio.. 200 ரூபாய் விலை புள்ளியில் தினமும் 3GB டேட்டா..

200 ரூபாய் விலை புள்ளி முதல் தினமும் 3GB டேட்டா.. ரூ. 500-குள் மாஸ் காட்டிய ஜியோ:

அந்த வகையில் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட, தினமும் 3ஜிபி டேட்டா (3GB daily data) நன்மை வழங்கக்கூடிய திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இத்துடன் டேட்டா நன்மை மட்டுமின்றி இப்போது எக்ஸ்ட்ரா இலவச நன்மைகளும் (Extra Free Benefits) வழங்குகிறது. ஜியோ தினசரி 3ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் இலவச நன்மைகளை ரூ. 500 விலைக்குள் வழங்கும் திட்டங்களின் விபரம் இதோ.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 219 Prepaid Plan):
இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை மொத்தமாக 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக நிறுவனம் ஜியோ டிவி (JioTV ), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) நன்மையுடன் வருகிறது. இத்துடன் 2ஜிபி இலவசமாக கிடைக்கிறது.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 Prepaid Plan):
இந்த ரீசார்ஜ் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். கூடுதல் நன்மையாக இந்த திட்டம் ஜியோ டிவி (JioTV ), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் இத்துடன் முடிந்துவிடுவது இல்லை. இன்னும் இருக்கிறது. ஜியோ வலைத்தள பக்கத்தின் தகவல் படி, ஜியோவின் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு கூடுதல் இலவச நன்மையாக இப்போது 6ஜிபி டேட்டா நன்மையையும் கிடைக்கிறது. இந்த எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் ரூ.61 மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

28 நாட்களுக்கு இந்த திட்டம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 6ஜிபி உடன் சேர்த்து 90ஜிபி கிடைக்கிறது. இந்த திட்டங்கள் மட்டுமே ரூ.500 விலைக்குள் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜியோவின் ரூ. 999 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Daily 3GB Data Unlimited Voice Call 100 SMS Prepaid Plan Under Rs 500 To Recharge Now In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X