Jio வின் ஜுஜுபி பிளான்.. மார்க்கெட்ல இருக்குற 28 நாள் ரீசார்ஜ்களை தூக்கி சாப்பிடும் டேட்டா நன்மை!
கடந்த நவம்பர் மாதத்தில், இந்திய டெலிகாம் நிறுவனத்தின் பெரிய பாய் ஆன முகேஷ் அம்பானி, ஜியோ (Jio) கஸ்டமர்களை குஷிப்படுத்தும் படியான 3 தரமான சம்பவங்களை செய்திருந்தார். ஒன்று - ஜியோ ஏர்ஃபைபர் ஆபர். இரண்டாவது - ஜியோ 5ஜி கிஃப்ட் வவுச்சர் ஆஃபர். மீதமுள்ள ஒன்று - ஹெவி டேட்டா யூசர்களை சுண்டி இழுக்கும் ஒரு சீப்பஸ்ட் பிளானின் அறிமுகம்!
அதுதான் ரூ.11 டேட்டா பேக். இந்த திட்டம் ஜியோவின் ரூ.175 டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் அதே 10ஜிபி அளவிலான டேட்டாவை வெறும் ரூ.11 க்கு வழங்குகிறது. இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால் வேலிடிட்டி தான். ரூ.175 ஆனது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகின்றன. மறுகையில் உள்ள ரூ.11 திட்டமானது வெறும் 1 மணிநேரம் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

அதாவது ஜியோவின் ரூ.11 டேட்டா பேக் ஆனது 1 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். இதன்கீழ் 10ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டா கிடைக்கும். இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.189-ன் கீழ் கிடைக்கும் 2ஜிபி டேட்டா நன்மையை விட மிகவும் அதிகம் என்பது ஒருபக்கம் இருக்க.. ரூ.11-ன் கீழ் கிடைக்கும் 10ஜிபி டேட்டாவை 1 மணி நேரத்தில் தீர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.
ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் நீங்கள் இருந்தாலும் கூட உங்களால் 10ஜிபி டேட்டாவை வெறும் 1 மணி நேரத்திற்குள் காலி செய்துவிட முடியாது. ஆனால் நிச்சயமாக சில பெரிய ஃபைல்களை டவுன்லோட் செய்ய முடியும் மற்றும் ஹை குவாலிட்டி வீடியோக்களை பார்க்க முடியும்.
மேலும் இரவு நேரங்களில் அடுத்த நாள் டேட்டா நன்மை கிடைப்பதற்கு முன்பாக உங்களுடைய டேட்டா லிமிட் தீர்ந்துவிட்டால்.. ரூ.49 செலவு செய்து 1 நாள் முழுவதுமான அன்லிமிடெட் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக, ரூ.11 திட்டத்தை ரீசார்ஜ் செய்து டேட்டா பலனை தொடர்ந்து பெறலாம். எப்படி பார்த்தாலும் ஜியோவின் இந்த ஜுஜுபி பிளான் - தேவைப்படுவோர்களுக்கு மிகவும் லாபகரமான திடமாக இருக்கும்!
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் ஆபரை பொறுத்தவரை, இந்த 50 நாள் ஆபரின் கீழ் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள், 13 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் வைஃபை, ரூ.1,000 மதிப்புள்ள இலவச இன்ஸ்ட்டாலேஷன், ரூ.1,000 மதிப்புள்ள இலவச கூப்பன், ரூ.16,500 மதிப்புள்ள இலவச ஹோம் டிவைஸ்கள் என எல்லாமே ரூ.1,111 க்கு கிடைக்கும்.
ஜியோ 5ஜி கிஃப்ட் வவுச்சர் ஆஃபரை பொறுத்தவரை, 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் இந்த வவுச்சரின் விலை ரூ.601 ஆகும். இந்த வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக அணுக கிடைக்கும். முன்னதாக 5ஜி கிடைக்கும் பகுதியில் ஜியோ கஸ்டமர்களுக்கு அணுக கிடைத்த ஜியோவின் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர், இப்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை.
கடந்த 2024 ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்த ரீசாஜ் கட்டண விலை உயர்விற்கு பின்னர், ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் அணுக கிடைக்கிறது. அதாவது டெய்லி 1ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் கிடைப்பதில்லை.
ஆனால் புதிய ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சரின் கீழ் 1ஜிபி அல்லது 1,5ஜிபி டேட்டா பயனர்களும் கூட 5ஜி டேட்டாவை பெறலாம். ரூ.601 திட்டம் மொத்தம் 12 தனித்தனி டேட்டா வவுச்சர்களாக ((ரூ.51 மதிப்புள்ள 12 டேட்டா வவுச்சர்கள்) கிடைக்கும். இதை அடுத்த 1 ஆண்டுக்கு.. அதாவது ஒவ்வொரு மாதமும் 1 வவுச்சர் என பயன்படுத்தி.. ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம்.


Click it and Unblock the Notifications








