Jio யூசர்களுக்கு 2 குட் நியூஸ்! இனி பழையபடி 1 மாசத்துக்கு ரூ.200.. கூடவே 2GB டேட்டா திட்டத்தின் விலை குறைப்பு!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையில் 2 முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. இந்த 2 மாற்றங்களுமே ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கான (Prepaid Customers) குட் நியூஸ் என்றே கூறலாம். அதென்ன மாற்றங்கள்?இதோ விவரங்கள்:
முதல் மாற்றம் - பழையபடி 1 மாசத்துக்கு ரூ.200 க்கு இறங்கிய ஜியோ: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரூ.189 பிளானை மீண்டும் சேர்த்துள்ளது. இந்த திட்டம் ஜியோ ப்ரீபெய்ட் பிரிவில் உள்ள வேல்யூ (Value) பிரிவின் கீழ் உள்ள மலிவு விலை பேக்ஸ் (affordable packs) என்கிற துணைப்பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

ரூ.189 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது மொத்தம் 2ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோடிவி (JioTV), பிரீமியம் சந்தா இல்லாத ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான இலவச அணுகலும் கிடைக்கும்.
நினைவூட்டும் வண்ணம், டிராய் (TRAI) உத்தரவின் கீழ் ஜியோ நிறுவனம் 2 புதிய வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்திய வேகத்தில், அதன் ரூ.189 திட்டத்தை அதன் சேவையில் இருந்து சைலன்ட் ஆக நீக்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த திட்டம் ஜியோ இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதாவது ஜியோ பயனர்கள் இப்போது தங்கள் சிம் கார்டுகளை செஆக்டிவ் ஆக வைத்திருக்க இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
இரண்டாவது மாற்றம் - டெய்லி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் மீது விலை குறைப்பு: முன்னதாக ஜியோ ப்ரீபெய்ட் சேவையின்கீழ் ரூ.448 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் தற்போது ரூ.3 விலை குறைக்கப்பட்டு ரூ.445 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஜியோவின் வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிரிவின் கீழ் இதேபோன்ற விலை கொண்ட ஒரு (ரூ.448) திட்டம் இருப்பதால், டெய்லி 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ.448-ன் விலை ரூ.445 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நன்மைகளை பொறுத்தவரை ஜியோவின் ரூ 445 திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட்வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜீ 5( Zee5), ஜியோ சினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சோனி லைவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), கான்சா லங்கா (Kanchha Lannka), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஹொய்ச்சொய் (Hoichoi), பேன்கோட் (FanCode), பிளான்ட் மராத்தி (Planet Marathi) மற்றும் சொவ்பால் (Chaupal) ஆகிய ஓடிடி ஆப்களுக்கான அணுகல்களும் கிடைக்கும்.
தற்போது ரூ.448 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோவின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ஆனது முதலில் ரூ.458 க்கு அறிமுகம் ஆனது என்பதும், பின்னர் ரூ.10 விலை குறைக்கப்பட்டு ரூ.448 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரூ.448 திட்டத்தின் நன்மைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.448-ன் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.


Click it and Unblock the Notifications








