Jio கஸ்டமர்ஸ் தலையில் இடி.. இனி 90 நாள் இல்ல 30 நாள் மட்டுமே.. அம்பானி செய்த அதிரடி மாற்றம். எந்த திட்டத்தில்?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது 90 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்த ஒரு திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்து, அதன் வேலிடிட்டியை வெறும் 30 நாட்களாக குறைத்து உள்ளது. எந்த திட்டத்தில்? இதோ விவரங்கள்:
எந்த திட்டத்தில்? 90 நாளில் இருந்து 30 நாட்களாக வேலிடிட்டி குறைப்பை பெற்றுள்ளது ஜியோவின் ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக் (Jio Rs.195 Cricket Data Pack) ஆகும். இதன்கீழ் கிடைத்த டேட்டா பலன்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, ஜியோ நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை கணிசமாக குறைத்துள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, ரூ.195 ஆனது முன்னதாக நீண்ட காலத்திற்கு, அதாவது 90 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருந்தது. ஆனால் இப்போது இந்த பேக், வெறும் 30 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை மட்டுமே வழங்குகிறது. இது ஒரு திட்டத்தில் நாம் முன்னெப்போதும் பார்த்திராத குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகும்.
ஜியோ ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக்கின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன் வேலிடிட்டி புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், நன்மைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தை ரீசாஜ் செய்யும் சந்தாதாரர்கள் மொத்தம் 15 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இது அனைத்தும் அதிவேகஇண்டர்நெட் ஸ்பீடின் கீழ் கிடைக்கும்.
ஒதுக்கப்பட்ட டேட்டா தீர்ந்த உடன், அதாவது 15ஜிபி டேட்டா காலி ஆனவுடன் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆகா குறைக்கப்படும்; இதே ஸ்பீடின் கீழ் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பேக் - டேட்டா நன்மையை மட்டுமே கொண்டுள்ளது, இதில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் - டேட்டாவுடன் கூடுதலாக, கிரிக்கெட் மற்றும் பிற கன்டென்ட்களை ஸ்ட்ரீம் செய்ய விரும்பும் பயனர்களுக்காக, ஜியோவின் ரூ.195 ஆனது 90 நாட்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் (Free JioHotstar mobile subscription) தொடர்ந்து வழங்குகிறது.
OPINION: டேட்டா ஒதுக்கீடு மாறாமல் இருந்தாலும் மற்றும் இலவச ஓடிடி சந்தா பலன் சேர்க்கப்பட்டிருந்தாலும், செல்லுபடியாகும் காலம் 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக கடுமையாகக் குறைக்கப்பட்டிருப்பது நுகர்வோருக்கான மாதாந்திர செலவை திறம்பட அதிகரிக்கிறது. இதனால், ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இந்த திருத்தம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக அமைகிறது. மேலும் இந்த திருத்தத்தின் மூலம், ஜியோவின் ப்ரீபெய்ட் டேட்டா பேக்குகளின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாகவும் மாறியுள்ளது.
சரி ஜியோ சேவையின் கீழ் வேறு என்னென்ன கிரிக்கெட் டேட்டா பேக்குகள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது? முதலில் ஜியோ ரூ.79 கிரிக்கெட் டேட்டா பேக் உள்ளது. வெறும் ரூ.79 க்கு கிடைக்கும் இந்த கிரிக்கெட் டேட்டா பேக் ஆனது 30 நாட்கள் செல்லுபடியுடன் 3ஜிபி அதிவேக டேட்டாவையும், அதனுடன் 30 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது. டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், பயனர்கள் 64 கேபிபிஎஸ் என்கிற குறைக்கப்பட்ட வேகத்தின் கீழ் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ஜியோ ரூ.100 கிரிக்கெட் டேட்டா பேக் உள்ளது. ரூ.195 திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்ட மறுகையில் ஜியோ நிறுவனமா தனது கிரிக்கெட் டேட்டா பேக் சலுகையின் கீழ் கிடைக்கும் ரூ.100 டேட்டா பேக்கில் டேட்டா பலனை அதிகரித்துள்ளது. ஜியோ ரூ.100 டேட்டா பேக் இப்போது 30 நாட்கள் செல்லுபடியுடன் 6ஜிபி (முன்பு 5ஜிபி) அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
6ஜிபி என்கிற அதிவேக டேட்டாவை பயன்படுத்திய பிறகு, பயனர்கள் 64 கேபிபிஎஸ் என்கிற குறைக்கப்பட்ட வேகத்தின் கீழ் இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். கூடுதலாக, இந்த பேக்குடன் 30 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வருகிறது. கடைசியாக உள்ளது ஜியோ ரூ.149 கிரிக்கெட் டேட்டா பேக் ஆகும். இதன் கீழ் 30 நாட்கள் செல்லுபடியுடன் கூடிய 10ஜிபி அதிவேக டேட்டாவும், 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும். அதிவேக டேட்டா தீர்ந்த பிறகு, பயனர்கள் தொடர்ந்து 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








