லாஸ்ட் சான்ஸ்! நவ.5 தான் கடைசி.. அதுக்குள்ள இந்த 2 Jio பிளான்ல 1 ரீசார்ஜ் செஞ்சிடுங்க.. இல்லனா வருத்தபடுவீங்க!
ஜியோ (Jio) சேவையின் கீழ் உள்ள ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் ஆபர், 2024 நவம்பர் 5 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால்.. இதைப்பற்றி இன்னும் தெரியாத வாடிக்கையாளர்கள் விரைவாக செயல்பட்டால் பெருத்த லாபம் அடையலாம்.. இல்லையென்றால் "நல்ல சான்ஸ்.. மிஸ் ஆகிடுச்சே!" என்று கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள்!
அதென்ன ஸ்பெஷல் ஆபர்? முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 2024 தீபாவளி பண்டிகைக்காக "தீபாவளி தமாக்கா ஆபர் 2024" என்கிற பெயரின் கீழ் பல வகையான சலுகைகளை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருந்தது. அதில் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 மதிப்புள்ள காலாண்டு திட்டம் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 மதிப்புள்ள 1 ஆண்டு திட்டங்களின் மீதான சலுகையும் அடக்கம்.

ஜியோ வலைதளத்தின் கூற்றுப்படி இவ்விரு ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள இலவச நன்மைகள் கிடைக்கும். அதாவது ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப்-க்கான (EaseMyTrip) வவுச்சர், ரூ.999 அல்லது அதற்கு மேலான பர்சேஸ்களுக்கான ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன் மற்றும் ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் என மொத்தம் ரூ.350 மதிப்புள்ள நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
இவ்விரு திட்டங்களின் வழியாகவும் கிடைக்கும் இலவச வவுச்சர்கள் ஆனது, மைஜியோ ஆப்பில் உள்ள பயனர்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். தேவையான போது அவைகளை ரீடீம் செய்துகொள்ளலாம். அதை செய்ய, முதலில் உங்கள் போனில் இருக்கும் மைஜியோ (MyJio) ஆப்பை திறக்கவும். பின்னர் ஆபர்ஸ் (Offers) செக்ஷனுக்கு செல்லவும்.
இப்போது 'மை வின்னிங்ஸ் (My winnings) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து திறந்து, நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் கூப்பனை (அதாவது ஈஸ்மைட்ரிப், ஏஜியோ அல்லது ஸ்விக்கி கூப்பனை) கிளிக் செய்யவும். பின்னர் கூப்பன் கோட்-ஐ காப்பி செய்து, பார்ட்னர் பிளாட்ஃபார்மிற்கு (ஈஸ்மைட்ரிப், ஏஜியோ அல்லது ஸ்விக்கி பிளாட்ஃபார்மிற்கு) சென்று, பேமெண்ட் செய்யும் நேரத்தில் கூப்பனை பயன்படுத்தி உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும்.
ஜியோ ரூ.899 திட்டத்தின் நன்மைகள்: இதன் கீழ் ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல்ஆகிய நன்மைகள் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ.3,599 திட்டத்தின் நன்மைகள்: இது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா, ட்ரூ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர், ன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 365 நாட்கள் (1 ஆண்டு) ஆகும்.
கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு ஜியோ தீபாவளி தமக்கா ஆபரை பொறுத்தவரை, வரையறுக்கப்பட்ட கால சலுகையாக 2 ஜியோபாரத் 4ஜி போன்கள் மீது ரூ.300 விலை குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகள் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) மாடல்கள் ஆகும். இவ்விரு மாடல்களுமே ரூ.999 க்கு பதிலாக வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை சரியாக எப்போது முடியும் என்கிற விவரங்கள் இல்லை!


Click it and Unblock the Notifications