Home
News

Jio கஸ்டமர்ஸ் கதறல்.. ரூ.150 போச்சு.. ரீசார்ஜ் செய்யுற அப்போ.. தெரியாம கூட இந்த தப்பை செஞ்சிடாதீங்க!

மினிமம் ரீசார்ஜ் (Minimum Recharge) திட்டங்களை.. அதாவது மலிவான விலைக்கு நீண்ட வேலிடிட்டியை தேடும் பெரும்பாலான ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள், தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கும் பிரிவின் (1GB/day Plans) கீழ் உள்ள 3 திட்டங்களைத்தான் "மாற்றி மாற்றி" ரீசார்ஜ் செய்கின்றனர்.

அதாவது ரூ.149, ரூ.179 மற்றும் ரூ.209 திட்டங்களை தான் "மறுபடியும் மறுபடியம்" ரீசார்ஜ் செய்கிறார்கள். இதற்கிடையில் ரூ.148 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு ஜியோடிவி பிரீமியம் பிளானை ((JioTV Premium Plan) சில ஜியோ வாடிக்கையாளர்கள் மினிமம் ரீசார்ஜ் என்று நினைத்து கொண்டுள்ளனர்.

Jio கஸ்டமர்ஸ் கதறல்.. ரூ.150 போச்சு!

ஆனால் உண்மையில் அதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். ரூ,148 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தாலும் கூட.. இதுவொரு டேட்டா வவுச்சர் தான். அதாவது இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு உங்களிடம் ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் பிளான் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.

ரூ.148-ன் கீழ் கிடைக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி ஆனது இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 12ஓடிடி தளங்களுகளை அணுகவதற்கான வேலிடிட்டியாகும். அறியாதோர்களுக்கு ஜியோடிவி பிரீமியம் என்பது ஏற்கனவே இருக்கும் ஜியோடிவி இயங்குதளத்தின் ஒரு புதிய எக்ஸ்டென்ஷன் ஆகும். ஜியோடிவி பிரீமியம் வழியாக ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே லாக்-இன்னின் (Single Log-in) கீழ் பல ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்களை அணுக முடியும்.

Jio கஸ்டமர்ஸ் கதறல்.. ரூ.150 போச்சு!

ரூ.148-ன் கீழ் சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாபல் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC On) மற்றும் ஹோசொய் (Hoichoi) ஆகிய ஓடிடி தளங்களுக்கான அணுகல் கிடைக்கும்.

மேலும் ஜியோ ரூ.148 திட்டத்தின்கீழ் உங்களுக்கு மொத்தம் 10ஜிபி டேட்டா கிடைக்கும். 10ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டாவை பயன்படுத்திய பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஜியோசினிமா பிரீமியத்திற்கான கூப்பன் மைஜியோ (MyJio) ஆப் வழியாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட ஜியோ எண்ணை பயன்படுத்தி லாக்-இன் செய்வதன் வழியாக வவுச்சர்கள் பிரிவின் கீழ் இந்த கூப்பனை அடையலாம்.

Jio கஸ்டமர்ஸ் கதறல்.. ரூ.150 போச்சு!

உண்மையான மினிமம் ரீசார்ஜ் எது? ஜியோ ரூ.149 தான்! இந்த திட்டம் 20 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 20ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) அணுகல் போன்றவைகளையும் வழங்குகிறது.

இன்னொரு மினிமம் ரீசார்ஜ் ஆன ரூ.179 திட்டமானது 24 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 24ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் அணுகல் போன்றவைகளையும் வழங்குகிறது.

டெய்லி 1ஜிபி டேட்டா பிரிவின்கீழ் கடைசியாக உள்ள ரூ.209 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் அணுகல் போன்றவைகளையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Customers Confusion on 2024 Minimum Recharge JioTV Premium Plan Rs 148 Vs Daily 1GB Plan Rs 149
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X