ஜூன் மாசம் முதல் வாரமே வெடி.. மொத்த Jio யூசர்கள் தலையிலும் இடி.. நிஜ முகத்தை காட்டப்போகும் அம்பானி!
4ஜி அறிமுகத்தின் போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் 'ஃபாலோ' செய்த அதே வியாபார யுக்தி தான் 5ஜி அறிமுகத்திலும் பின்பற்றப்படுகிறது. அறிமுகமான சில மாதங்களுக்கு.. எந்த விதமான செலவும் இல்லாமல் 4ஜி நெட்வொர்க் முற்றிலும் இலவசமாக கிடைத்தது. அதேபோல 5ஜி நெட்வொர்க்கும் கூட தற்போது வரை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அன்லிமிட்ட் 5ஜி டேட்டா ஆஃபர் (Unlimited 5G Data Offer) என்கிற பெயரின்கீழ், பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் 4ஜி திட்டத்தின் கீழ் 5ஜி டேட்டாவும் அணுக கிடைக்கிறது.
இதன் விளைவாக ஜியோ நிறுவனத்திற்கு புதிய நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது. எனவே இலவச 5ஜி டேட்டாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சேர்த்து, 2024 ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்கள் மீதான விலை உயர்வும் அறிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜியோவிற்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டுள்ளது? ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூஸர் (Average Revenue Per User) ஆனது, அதாவது ஒரு பயனருக்கான மாதாந்திர சராசரி வருவாய் ஆனது த்ரீ ஸ்டெரியிட் குவாட்டர்களுக்கு (Three-straight quarters) ரூ.181.7 ஆகவே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டண உயர்வு இல்லாமல் ஏஆர்பியு-வை மேலும் உயர்த்துவது கடினமாக இருக்கும் என்பதால், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, ஜியோ நிறுவனமானது தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் என்றும்.. ஜியோ நிறுவனம் 20% கட்டண உயர்வை அறிவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பான்-இந்தியா அடிப்படையிலான 5ஜி அறிமுகமாகும் முடிந்துவிட்டதால், இது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது.

ரீசார்ஜ் திட்டங்கள் மீதான விலை உயர்வானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மட்டுமல்ல, ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவைகள் போர்ட்ஃபோலியோ மற்றும் ஒட்டுமொத்த குழு நிதிகளுக்கும் முக்கியமான விஷயமாக இருக்கும். ஜியோ நிறுவனம் மட்டுமல்ல ஏர்டெல் நிறுவனமும் கூட தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த ஏப்ரல் மாதத்தில் டெலிகாம் ஆய்வாளர் ஒருவர், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் கட்டணங்களை 15 - 17% அதிகரிக்கும். இந்தியாவில், ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை முதலில் அதிகரிக்கும் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என்பது போல் தெரிகிறது. இதுகுறித்து சுனில் மிட்டலும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

17% என்கிற விலை உயர்வு, நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தற்போது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.349 ஆக மாறும். இதேபோல தற்போது ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலையை ரூ.67 அதிகரித்து ரூ.466 ஆக மாற்றும்.
தற்போது வரையிலாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் சரி, பார்தி ஏர்டெல் நிறுவனமும் சரி.. இரண்டுமே தத்தம் 5ஜி நெட்வொர்க் சேவைகளை வைத்து கொஞ்சம் கூட பணம் பார்க்கவில்லை; ஆகவே ஜூன் 2024 வரும் விலை உயர்வானது மிகவும் மோசமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை என்கிற பெயரின் கீழ், ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் முற்றிலும் இலவசமாகவே 5ஜி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், 5ஜி நெட்வொர்க் சேவைகளைப் பயன்படுத்த நுகர்வோர்கள் கொஞ்சம் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்கிற உண்மையை மனதில் வைத்துக்கொள்ளவும்.
வோடாபோன் ஐடியாவின் நிலை என்ன? 5ஜி சேவையை இன்னும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கூட விஐ (VI) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கும் கூட ரீசார்ஜ் கட்டண உயர்வு மிகவும் தேவையான ஒரு நடவடிக்கையாக உள்ளது. ஏனென்றால் இந்நிறுவனத்தின் ஏஆர்பியு மிக மெதுவாகவே வளர்ந்து வருகிறது. ஆக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்றுமே இந்த ஜூன் மாதத்தில் விலை உயர்வை அறிவிக்கலாம். தயாராக இருக்கவும்!


Click it and Unblock the Notifications