Home
News

ஜியோ ரூ.749-ன் மீது அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் ஆபர் நீக்கப்படவில்லை!

அடுத்த 1 மாதத்திற்கு.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2024 ஆம் ஆண்டு 12 ஜூலை ஆம் தேதி வரையிலாக.. உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டில் நடக்கும் கல்யாணத்தை பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும். இதற்கிடையில் "இதென்ன ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கான கல்யாண கிஃப்ட்-ஆ!" என்று கேட்க தோன்றும்படியாக.. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஒரு இலவச சேவையானது இன்னும் நீடிக்கிறது. அதென்ன சலுகை? குறிப்பிட்ட திட்டத்தை இப்போதும் நம்பி ரீசார்ஜ் செய்யலாமா? இதோ விவரங்கள்:

2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது வாடிக்கையாளர்களின் டேட்டா தேவைகள் அதிகமாக இருக்கும் என்பதாலும், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமா ஆப் தான் ஐபிஎல் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ததாலும் பல ஜியோ திட்டங்கள் மீது எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் அறிவிக்கப்பட்டது. அதில் ரூ.749 திட்டமும் அடங்கும்.

ஜியோ ரூ.749-ன் மீது அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் ஆபர் நீக்கப்படவில்லை!

சுவாரசியமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் ரூ.749-ன் மீது அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் ஆபர் நீக்கப்படவில்லை. அதாவது ரூ.749-ன் கீழ் 10 பைசா செலவு இல்லாமல் முற்றிலும் இலவசமாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கிறது. இருப்பினும் கூட, இப்போதைக்கு இது முற்றிலும் பயனற்ற ஒரு கிரிக்கெட் ஆபர் ஆகும்.

ஏனென்றால் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் ஆனது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாகவே லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஆனால் ரூ.749 திட்டத்தில் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா சேர்க்கப்படவில்லை. எனவே உங்களிடம் ஏற்கனவே ஹாட்ஸ்டார் சந்தா இல்லாத பட்சத்தில், கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்காக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் எந்த பலனும் இல்லை. ஆக இதற்கு பதிலாக வேறு எந்தெந்த ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்யலாம்? இதோ லிஸ்ட்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் வரும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்: ரூ.328, ரூ.331, ரூ.388, ரூ.598, ரூ.758, ரூ.808, ரூ.3178, ரூ.1198, மற்றும் ரூ.449 ஆகிய ஜியோ திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகின்றன. இந்த திட்டங்கள் ஒன்றுக்கொன்று வழங்கும் நன்மைகளில் முற்றிலும் வேறுபட்டவைகளாக இருக்கும்.

இதில் சில ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium) சந்தாக்களுடன் வருகின்றன; சில டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் வருகின்றன. மேலும் அனைத்துமே (ரூ.331 மற்றும் ரூ.148 திட்டத்தை தவிர) அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளுடன் (Unlimited 5G Data Offer) வருகின்றன.

முன்னதாக பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்ட், ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்களை (T20 Cricket Tournament plans) அறிமுகப்படுத்தியது. இந்த டி20 தொகுப்பின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் அனைத்து திட்டங்களும் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகின்றன.

ஏர்டெல் அறிவித்துள்ள டி20 கிரிக்கெட் போட்டி திட்டங்கள் தொகுப்பின்கீழ் 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. முதலாவதாக ரூ.499 உள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்கும். அடுத்ததாக ரூ.869 உள்ளது. இது 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும். கடைசியாக ரூ.3359 உள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும்.

முதல் இரண்டு திட்டங்கள் (ரூ.499 மற்றும் ரூ.869) ஆனது 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது மற்றும் கடைசியாக உள்ள 1 ஆண்டு திட்டமானது 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது. இதுதவிர்த்து மேற்கண்ட 3 திட்டங்களும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream) வழியாக 20க்கும் மேற்பட்ட ஓவர்-தி-டாப் கன்டென்ட் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகல், அத்துடன் அப்பலோ 24x7 மற்றும் ஃபாஸ்ட்டேக் பலன்கள் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Cricket Offer Continues Rs 749 Plan Gives Extra 20GB Data But Not Hotstar Which Plans To Choose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X