Home
News

தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. ரூ.299 க்கு Jio-வின் Corporate பிளான்.. இலவச JioFi உடன் டேட்டா, எஸ்எம்எஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆனது எஸ்எம்இ-க்கள் (SMEs) என்கிற சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (Small and Medium Businesses) மற்றும் கார்ப்பரேட் குழுக்களை இலக்காக கொண்ட ஒருங்கிணைந்த திட்டமான கார்ப்பரேட் ஜியோஃபையை (Corporate JioFi) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்கீழ் மாதத்திற்கு ரூ.299 முதல் தொடங்கும் திட்டங்களுடன், ஜியோ நிறுவனமானது மலிவு விலையில் டேட்டா பேக்குகள், எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் ஜியோஃபை டிவைஸையும் (JioFi) இலவசமாக வழங்குகிறது. இங்க கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த டிவைஸ் பயன்பாடு மற்றும் திரும்ப பெறும் (Use-and-return basis) அடிப்படையில் வழங்கப்படுகிறது.

தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. ரூ.299 க்கு Jio-வின் Corporate பிளான்!

இலவசமாக கிடைக்கும் ஜியோஃபை டிவைஸின் சிறப்பம்சங்கள்: இந்த திட்டம் ரூட்டர் எம்2எஸ் பிளாக் (Router M2S black) மூலம் இயக்கப்படுகிறது, இது 2300/1800/850 மெகாஹெர்ட்ஸ் பேண்டுகளில் எல்டிஇ-ஐ (LTE) ஆதரிக்கும் ஒரு சிறிய வைஃபை யூனிட் (Small Wi-Fi Unit) ஆகும்.

இது 10 வைஃபை இணைப்புகள் மற்றும் ஒரு யூஎஸ்பி டெதர்டு டிவைஸ்-க்கான அனுமதியை வழங்கும். 2300mAh பேட்டரியுடன் வருவதால் பயணத்தின் போதும் கூட இது சுமார் 5 முதல் 6 மணிநேரம் வரையிலான ப்ரவுஸிங்கை உறுதி செய்கிறது. மேலும் இந்த டிவைஸ் 2.4 ஜிகாஹெர்ட்ஸ்-ல் IEEE 802.11 b/g/n-ஐ ஆதரிக்கிறது மற்றும் மைக்ரோ-எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ-Uயுஎஸ்பி சார்ஜிங்குடன் வருகிறது.

இதை ஒரு ஹைஎண்ட் டூயல்-பேண்ட் அல்லது 5ஜி ரூட்டர் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது நிலையான 4ஜி அணுகலுக்கான நம்பகமான, ஒரு சிறிய விருப்பமாக சந்தைப்படுத்தப்படுகிறது. கடைசியாக இந்த கார்ப்பரேட் ஜியோஃபை ஆனது வாய்ஸ் மற்றும் டேட்டாவிற்கான ஜியோகால் ஆப் (JioCall App) ஆதரவு, மைக்ரோ-எஸ்டி வழியாக பைல் ஷேரிங் மற்றும் WPS உடன் ஒன்-டச் செட்டப் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியது.

கார்ப்பரேட் ஜியோஃபையின் கீழ் கிடைக்கும் மூன்று போஸ்ட்பெய்டு திட்டங்களின் விவரங்கள்:
1. ரூ. 299 / மாதம் - 35 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் / நாள், 24-மாத லாக்-இன்
2. ரூ.349 / மாதம் - 50 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் / நாள், 18-மாத லாக்-இன்
3.ரூ..399 / மாதம் - 65 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் /நாள், 18-மாத லாக்-இன்

மேலும் ரிலையன்ஸ் ஜியோ ஆனது 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவரையும் (200GB Data Rollover) அனுமதிக்கிறது. மேலும் குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்ட பிறகும் கூட 64 Kbps என்கிற ஸ்பீடில் தொடர்ந்து இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இலவசமாக வரும் ஜியோஃபை டிவைஸ் ஆனது முன்பண செலவை குறைக்கிறது, அதே சமயம் லாக்-இன் முறை ஆனது அவர்கள் நீண்டகால வாடிக்கையாளராக இருப்பதை உறுதி செய்கிறது.

கார்ப்பரேட் ஜியோஃபை என்பது வீடுகளில் இருந்து சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை செய்பவர்களுக்குமான.. சிறிய நிறுவனங்களுக்குமான ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய முயற்சியாகும். மலிவு விலை திட்டங்கள், இலவச டிவைஸ் மற்றும் எளிமையான அமைப்பு ஆகியவைகள் பயணத்தின்போது செலவு குறைந்த இணையத்தை தேடும் சிறு வணிகங்களை பெரிதும் ஈர்க்கக்கூடும்.

ஜியோவின் இந்த நடவடிக்கை ஆனது - நிறுவன இணைப்பு சந்தையில் (Enterprise connectivity market) ஒரு பெரிய பங்கை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஜியோ ஏற்கனவே நுகர்வோர் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், கார்ப்பரேட் சேவைகள் ஆனது இன்னும் பெரும்பாலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிராட்பேண்ட் நிறுவனங்களுக்கிடையில் பகிரப்படுகின்றன. அதை முடிந்த வரை தன்பக்கம் ஈர்க்க ஜியோ களமிறங்கி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Corporate JioFi Plans With Free JioFi Device at Juts Rs 299 Per month all you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X