Home
News

Jio கஸ்டமர்கள் கவனத்திற்கு.. விலை ஏத்துன பாவத்துக்கு 20GB இலவசமாக கொடுக்கும் அம்பானி.. எந்த திட்டத்தில்?

இன்னமும் கூட, பெரும்பாலான இந்தியர்களால் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் ரீசார்ஜ் விலை உயர்வை (Recharge Price Hike) ஜீரணிக்க முடியவில்லை. பெட்ரோல் விலையானது 1 ரூபாய் அதிகரித்தாலும் கடுப்பாகும் இந்தியர்கள், ரீசார்ஜ் செய்வதற்காக ரூ.600 வரை அதிகம் செலவு செய்ய வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு அவ்வளவு எளிதாக பழகிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பெட்ரோல் டீசல் விலையை போல, உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் கட்டணங்கள் - எந்த காலத்திலும் - குறைக்கப்பட்டதே இல்லை!

ஆகையால் நமக்கு வேறு வழியே இல்லை. ஜூலை 3 அம தேதி முதல் அமலுக்கு வந்த ரீசார்ஜ் விலை உயர்வை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்; பழகித்தான் தீர வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால்.. ஜியோ நிறுவனம் விலை உயர்வை அறிவித்தாலும் கூட, வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் சில "விஷயங்களை" மாற்றிக்கொள்ளவில்லை.

Jio கஸ்டமர்கள் கவனத்திற்கு.. 20GB டேட்டாவை இலவசமாக கொடுக்கும் திட்டம்!

அதில் ஒன்று தான் - பழைய ரூ.749 திட்டத்தில் கிடைத்த 20ஜிபி இலவச டேட்டா சலுகை. தற்போது இந்த சலுகை புதிய ரூ.899 திட்டம் வழியாகவும் அணுக கிடைக்கிறது. 20ஜிபி இலவச டேட்டாவை தவிர்த்து ரூ,899-ன் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன? ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற புதிய திட்டங்களின் விலை என்ன? இதோ விவரங்கள்:

ஜியோ ரூ.899-ன் விரிவான நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 3 மாதங்கள் அல்லது 90 நாட்கள் ஆகும். ஜூலை 2 ஆம் தேதி வரையிலாக இது ரூ.749 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது.அப்போதும் கூட இதே வேலிடிட்டியை தான் வழங்கியது. பின்னர் ரூ.150 விலை அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.899-ன் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். ஆக 90 நாட்களுக்கு மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக இது 20ஜிபி இலவச டேட்டாவையும் வழங்குகிறது. இதையும் சேர்த்தால் ரூ.899-ன் கீழ் உங்களுக்கு மொத்தம் 220ஜிபி டேட்டா கிடைக்கும்.

வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களையும் வழங்கும். மேலும் 5ஜி சேவை அணுக கிடைக்கும் பகுதிகளில் உள்ள, 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் ஜியோ பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைத்த பழைய திட்டங்களின் புதிய விலை விவரங்கள்: முன்னதாக ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.455 ரீசார்ஜ் ரூ.509 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.459 ரீசார்ஜ் ரூ.599 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.269 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.319 ரீசார்ஜ் ரூ.379 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.539 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2899 ரீசார்ஜ் ரூ.3499 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.39 ரீசார்ஜ் ரூ.48 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Continues 20GB Free Data Offer Even After Rs 150 Price Hike on Rs 899 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X