அசத்திட்டீங்க அம்பானி.. ரூ.29க்கு ஒன்னு.. ரூ.89க்கு ஓன்னு.. Jio தரும் 51% தள்ளுபடி.. பிரீமியம் இனி கம்மி விலை
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு திடீரென 51% சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையுடன் இனி ஜியோ வாடிக்கையாளர்கள் (Jio customers) ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவை (Jio Cinema Premium subscription) மிகமிக குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 51 சதவீத விலை தள்ளுபடியின் பிறகு, இப்போது ஜியோ சினிமா பிரீமியம் சந்தா என்ன கட்டணத்திற்கு வாங்க கிடைக்கிறது? இதன் கீழ் எத்தனை விதமான OTT சேனல்களின் உள்ளடக்கங்கள் பயன்படுத்த கிடைக்கிறது என்ற முழு விபரத்தை பார்க்கலாம்.
ஜியோ (Jio) நிறுவனம் இப்போது அதன் ஜியோ சினிமா சந்தா திட்டங்களின் (Jio Cinema Subscription Plans) விலைகளை நம்ப முடியாத அளவிற்கு வெகுவாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி மிகவும் மலிவான விலையில் பலதரப்பட்ட OTT உள்ளடக்கங்களை அனுபவிக்க முடியும். ஒருவேளை நீங்கள் அதிகமாக OTT ஸ்ட்ரீமிங் சேவைக்காக (streaming service) செலவு செய்து வருகிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அசத்திட்டீங்க அம்பானி.. Jio Cinema சேவை இனி ரூ.29க்கு ஒன்னு.. ரூ.89க்கு ஓன்னு:
ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இப்போது ஜியோ சினிமா சந்தாவின் மீது விலை குறைப்பு (Jio cinema subscription price reduced) அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜியோ சினிமா சேவைக்கான (Jio cinema standard subscription price) பொதுவான சந்தா விலை ரூ. 59 முதல் துவங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட 51% தள்ளுபடிக்கு (51 percent discount) பிறகு, இந்த சாந்தாவின் கட்டணம் ரூ. 29 ஆக குறைந்துள்ளது. வெறும் 29 ரூபாய்க்கு ஒரு மாதம் முழுக்க உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், சீரிஸ்களை நீங்கள் கண்டு மகிழலாம்.
நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லைவ் (SonyLIV), மற்றும் ஜீ5 (Zee5) போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் சூழ்நிலையில், முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ சினிமா தளம் மட்டும் வெறும் 29 ரூபாய்க்கு ஒரு மாத கால சந்தாவை வழங்கி அசத்தியுள்ளது.
ஜியோ சினிமா சந்தா திட்டங்களின் கட்டணம் (Jio Ciema Subscription Plan Price):
இந்த சந்தாவை பயன்படுத்தி பயனர்கள் ஒரே ஒரு சாதனத்தில் (1 device limit Jio Cinema subscription) இருந்து மட்டும் உள்ளகங்களை பார்த்து மகிழலாம். இது அடிப்படை ஜியோ சினிமா திட்டத்திற்கான கட்டணமாகும். மறுபுறம், ஜியோ நிறுவனம் இப்போது அதன் பிரீமியம் சந்தா சேவைக்கும் 51% தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஜியோ சினிமா பிரீமியம் சாந்தாவின் (Jio Cinema Premium Plan Price) வழக்கமான கட்டணம் ரூ. 149 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது இந்த சாந்தாவின் மீது ஜியோ நிறுவனம் 40% தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு பிறகு இந்த பிரீமியம் சாந்தாவின் திட்டம் ரூ. 89 விலையில் கிடைக்கிறது. ஜியோ சினிமா பிரீமியம் சந்தா நன்மையில் சிறந்த நன்மையாக பார்க்கப்படுவது இதன் டிவைஸ் நன்மை தான். ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவை வைத்து நீங்கள் 4 சாதனங்களில் ($ device limit for Jio Cinema Premium Plan) ஒரே நேரத்தில் OTT உள்ளடக்கங்களை 4K தரத்தில் கண்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications








