மினிமம் சிம் ஆக்டிவ்.. இனி மாசத்துக்கு ரூ.158 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. Jio இறக்கிய அடிமட்ட திட்டம்!
ஜியோ (Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும், மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கே திட்டங்களை கொடுக்கிறது. சொல்லப்போனால், கட்டண உயர்வுக்கு பிறகு அடிமட்ட விலையில் 336 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கொண்ட திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.158 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ சிம் கார்டு ஆக்டிவாக (Jio SIM Card Active) இருக்க வேண்டுமானால், வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஜியோவில் குறைந்தபட்ச விலை கொண்ட திட்டமாக ரூ.189 திட்டம் இருக்கிறது. ஆனால், இப்போது பார்க்கப்போகும் திட்டமானது, அதைவிட மலிவான விலையில் அதாவது மாதாந்திரம் வெறும் ரூ.158 செலவில் கிடைக்கிறது.

மாதத்துக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யாமல், 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.1899 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் போதும், மாதத்துக்கு ரூ.158 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ள முடியும். இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோவின் கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ 1899 திட்ட விவரங்கள் (Jio Rs 1899 Plan Details): இந்த ஜியோ மலிவு விலை வருடாந்திர திட்டமானது (Jio Cheapest Yearly Plan) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெற்றால், உங்களுக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வீதம் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் சலுகை கிடைக்கும். வாய்ஸ் கால்கள் சலுகைக்கு குறை இருக்காது.
அதாவது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுவதும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ள முடியும். இந்த விலைக்கு திட்டம் கிடைப்பதால், டேட்டா சலுகையில் மட்டும் குறை இருக்கிறது. அதாவது, தினசரி டேட்டாவை இந்த வருடாந்திர திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
336 நாட்களுக்கும் மொத்தமாக லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை மட்டும் கொடுக்கப்பட்டுவிடும். ஆகவே, 24 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த 24 ஜிபி டேட்டாவை 336 நாட்கள் வேலிடிட்டிக்கு முன்பாகவே கஸ்டமர்கள் பயன்படுத்திவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா சலுகை கிடைக்கும். இது 64 கேபிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதுவும் லம்ப்-சம் சலுகையை போலத்தான், தேவைக்கு ஏற்ப கணக்கில்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு பிறகு ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களின் சலுகையை வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
இந்த திட்டம் எதனால் பெஸ்ட்? ஏர்டெல் நிறுவனமும் இதேபோல வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கும்படி ரூ.1999 மதிப்பிலான திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த திட்டத்துக்கு கூடுதலாக விலை இருப்பதால், 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோவை போலல்லாமல் 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு கொடுக்கிறது. ஆனால், டேட்டாவானது அதே 24 ஜிபி மட்டுமேதான்.
இந்த திட்டம் பார்ப்பதற்கு ஜியோவைவிட கூடுதல் சலுகைகளை கொண்டதை போல தோன்றலாம். ஆனால், ஜியோவில் கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இந்த திட்டத்தில் கிடையாது. ஆகவே, வாட்ஸ் அப், இமெயில் செக்கிங் போன்றவற்றுக்கு குறைவாக டேட்டா தேவைப்பட்டாலும் கட்டாயம் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி வரும். ஆனால், ஜியோவில் தேவையில்லை.


Click it and Unblock the Notifications








