ஓரங்கட்டிய ஜியோ.. ரூ.198-க்கு எல்லாமே அன்லிமிடெட்.. 5ஜி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. குஷியில் கஸ்டமர்கள்!
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு கிடைக்காத விலைக்கு ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு மட்டும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.300 விலைக்கு கிடைக்கும் இந்த அன்லிமிடெட் 5ஜி சலுகையானது, ஜியோவில் மட்டும் ரூ.198 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம், இப்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் கொடுக்க தொடங்கி இருக்கிறது. இருப்பிரும், ஆரம்ப கட்டமாக முக்கிய சர்க்கிள்களில் மட்டுமே கொடுக்கிறது. ஆனால், மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு மாறி வருகின்றன. இப்போது, 4ஜி சேவையை போல 5ஜி சேவை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

ஆனால், இதிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆதிக்கத்தை காட்டி வருகிறது. ஏனென்றால், அதனுடைய கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. சொல்லப்போனால், 4ஜி திட்டங்கள் கிடைக்கும் விலையில் இந்த திட்டத்தை கொடுக்கிறது. இப்போது, ஜியோவில் ஆரம்ப விலை திட்டம் ரூ.189ஆக இருக்கிறது.
இதில் 4ஜி டேட்டா கிடைக்கும். ஆனால், மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், அதைவிட ரூ.11 விலை அதிகமாக கிடைக்கும் ஜியோ ரூ.198 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், தினசரிக்கு 4ஜி டேட்டாவும் கிடைக்கிறது. இதில் வேலிடிட்டி மட்டுமே மாறுபடுகிறது. ஆனால், சலுகைகள் இதில் ஏரளமாக கிடைக்கிறது.
ஜியோ ரூ 198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள், 30 நாட்கள் அல்லது ஒரு மாத வேலிடிட்டி எதிர்பார்க்க முடியாது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுப்பதால், 14 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த விலைக்கு டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.
ஆகவே, இந்த மலிவு விலை 5ஜி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 14 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், 2 ஜிபி இல்லாமலேயே 5ஜி வேகத்தில் கணக்கில்லாமல் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
14 நாட்கள் முழுவதும் டேட்டாவுக்கு எந்த குறையும் இருக்காது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையே எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதில் கூடுதலாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகை உள்ளது.
ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இந்த 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஜியோ நிறுவனத்தில் ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் ரூ.299 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.349 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைக்கும். ஆனால், விலை கம்மியாக ஜியோவில் மட்டுமே திட்டம் இருக்கிறது. இது குறைவான பணத்தில் 5ஜி டேட்டாவை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.


Click it and Unblock the Notifications