ஒரே ஆப்ஷன்.. ரூ.200 கூட இல்ல.. அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
இந்தியாவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை அடிமட்ட விலையில் பயன்படுத்த வேண்டுமானால், ஒட்டுமொத்த டெலிகாம் நிறுவனங்களிலும் ஜியோ மட்டுமே மலிவான விலைக்கு திட்டத்தை கொடுக்கிறது. ரூ.200 விலைக்கும் கம்மியாக திட்டத்தை வைத்திருக்கிறது. இதற்கு ஏற்ப வேலிடிட்டியும் கிடைக்கிறது. வெறும் டேட்டா மட்டுமல்லாமல் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த ப்ரீரெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை தொடர்ந்து, வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இலவமாக கொடுக்க தொடங்கிவிட்டது. ஆனால், குறிப்பிட்ட திட்டங்களில் இருந்து மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த விலை மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜியோவில் மலிவாக இருக்கிறது.

ஜியோ ரூ 198 ரீசார்ஜ் (Jio Rs 198 Recharge): மற்ற நிறுவனங்களில் கிட்டத்தட்ட ரூ.300 விலை கொண்ட திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கின்றன. ஆனால், ஜியோ நிறுவனத்தில் மட்டும் வெறும் ரூ.198 விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.
சொல்லப்போனால், அன்லிலிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) மற்றும் தினசரி டேட்டாவுடன் (Daily Data) குறைவான வேலிடிட்டியில் கிடைக்கும் திட்டமாகவும் இது இருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 14 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
இந்த டேட்டா சலுகை மட்டுமல்லாமல், 14 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த தினசரி டேட்டாவை மட்டும் 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். டேட்டாவில் இதில் குறை இருக்காது.
டேட்டாவுக்கு அடுத்து என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்று பார்த்தால், 5ஜி டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கமாக கிடைப்பதை போலவே நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கிடைக்கிறது.
இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) கிடைக்காது. ஆகவே, கிளவுட் ஸ்டோரேஜ் எதிர்பார்க்க முடியாது. இந்த ஜியோ ரூ 198 திட்டம் மட்டுமே இப்போதுவரை மலிவான விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டமாக இருக்கிறது.
ஆனால், ஏர்டெல் நிறுவனத்தில் கிட்டத்தட்ட டபுள் விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கிடைக்கிறது. இருப்பினும், அதற்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. ஏர்டெல் ரூ 379 திட்டத்தில் இருந்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா தொடங்குகிறது. இந்த திட்டத்துக்கு ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இது ஜியோவைவிட டபுள் மடங்கு வேலிடிட்டியாகும்.
இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம். வோடபோன் ஐடியாவில் ரூ.299 விலை கொண்ட திட்டத்தில் இருந்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, ஜியோவில் மட்டுமே மலிவு விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications