2025 நல்லா இருக்கு.. ரூ.448-க்கு வந்தாச்சு.. வாய்ஸ் இருக்கு.. டேட்டா இருக்கு.. ஓடிடி இருக்கு.. 5ஜி இருக்கு!
ஜியோ (Jio) ப்ரீபெய்ட் ரீசார்ஜில் ஓடிடி சந்தாவை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு 2025ஆம் ஆண்டு நன்றாகவே இருக்கப் போகிறது. ரூ.175 மற்றும் ரூ.448 விலை கொண்ட திட்டங்கள் ஒன்று அல்ல இரண்டு அல்ல 10-க்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) ஆப்களை கொடுக்கிறது. இதுபோக வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), 5ஜி டேட்டா (5G Data) போன்ற சலுகைகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜியோ பொழுதுபோக்கு திட்டங்களின் (Jio Entertainment Plans) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 488 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 448 Prepaid Plan): இதுவொரு பொழுதுபோக்கு திட்டமாக இருந்தாலும், கூடுதலாக வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் 5ஜி சலுகைகளை கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.

மேலும், ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். கூடுதலாக ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
இந்த ஓடிடி ஆப்களின் சலுகையே கஸ்டமர்களுக்கு போதுமானாதாக இருக்கும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இனிமேல்தான் சலுகைகளே ஆரம்பிக்கிறது. இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகைகள் கிடைக்கிறது. ஓடிடிக்கு ஏற்ப டேட்டாவும் குறைவில்லாமல் பயன்படுத்த கிடைக்கிறது.
தினசரி டேட்டாவை பார்க்கையில், 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். போஸ்ட் டேட்டாவை பார்க்கையில், 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கிறது. வெல்கம் சலுகை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டாவை போலவே கால்களும் அன்லிமிடெட் சலுகையிலேயே கொடுக்கப்படுகிறது. லோக்கல் கால்கள் செய்யலாம்.
அதேபோல எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 100 வீதம் கிடைக்கிறது. இப்படி எல்லா சலுகைகளுடன் இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இப்போது, வெறும் ஓடிடி சலுகையை மட்டுமே கொடுக்கும் திட்டத்தை பார்ப்போம்.
ஜியோ ரூ 175 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 175 Prepaid Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி சலுகை மட்டுமே கிடைக்கும். இருப்பினும், டேட்டா வவுச்சராக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, 10 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
முதலில் ஓடிடி ஆப்களின் சலுகையை தெரிந்து கொள்வோம். இந்த பொழுதுபோக்கு திட்டத்திலும் சோனிலிவ், ஜீ5 மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சலுகை கிடைக்கிறது. அதேபோல சன்நெக்ஸ்ட் (Sun NXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi) , டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் பிளானட் மராத்தி (Planet Marathi) ஆப்களும் பயன்படுத்த கிடைக்கிறது.
மேலும், கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சாவ்பால் (Chaupal), டாகுபே (DocuBay) ஆப்களை பெற்று கொள்ளலாம். டேட்டாவை பார்க்கையில் 10 ஜிபி லம்ப்-சம் டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த ஜியோ பொழுதுபோக்கு திட்டங்களுக்கு ஒரே மாதிரியாக 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதிக ஓடிடிக்கு இவை நல்ல ஆப்ஷன்களாகும்.


Click it and Unblock the Notifications








