Home
News

இனிமே ரீசார்ஜ் இதுதான்.. பழைய விலை கிடையாது.. ரூ.239-க்கு மலிவு விலை ரீசார்ஜ்.. 1ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 1 ஜிபி டேட்டா கொடுக்கும் ரூ.249 மதிப்பிலான திட்டத்தை நீக்கிவிட்டன. இப்போது, ஜியோவில் மலிவு விலை மாதாந்திர திட்டமாக ரூ.239 ரீசார்ஜ் இருக்கப் போகிறது. ஆனால், இது ரூ.10 விலை கம்மியாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். இதற்கு அந்த திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்தால் மட்டுமே புரியவரும்.

ஜியோ கஸ்டமர்களிடம் ரூ.250 இருந்தால் போதும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் கூடிய ரூ.249 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடிந்தது. ஆனால், இந்த திட்டம் நீக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் மற்றொரு திட்டம் மலிவு விலை திட்டமாக மாறிவிட்டது.

இனிமே ரீசார்ஜ் இதுதான்.. பழைய விலை கிடையாது.. ரூ.239-க்கு மலிவு விலை!

ஆனால், இதன் விலை வெறும் ரூ.239ஆக இருக்கிறது. இது நீக்கப்பட்ட திட்டத்தைவிட ரூ.10 குறைவாக இருந்தாலும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், வேறு ஆப்ஷனே இல்லாமல் ரூ.299 திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஜியோ ரூ.239 திட்ட விவரங்கள் (Jio Rs 239 Plan Details): வழக்கம்போல ரூ.250 இருந்தால் போதும் மலிவு விலையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், 28 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இது கொடுக்கிறது.

24 நாட்கள் வேலிடிட்டி போதாது, 28 நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தொடங்கும் முதல் திட்டமாகவும் இது இருக்கிறது. இதிலும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவிலும் இந்த திட்டம் அதிகமாக கிடைக்கிறது.

ஜியோ ரூ.299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): 1 ஜிபி டேட்டா திட்டம் நீக்கப்பட்டவுடன், 1.5 ஜிபி டேட்டாவுடன் அடுத்த ஆப்ஷனாக இந்த திட்டம் உருவெடுத்துள்ளது. இதனால் ரூ.50 கூடுதலாக ஜியோ கஸ்டமர்களுக்கு செலவாகும். இது ஆரம்ப விலை திட்டமாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.

நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தமாக 42 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இருப்பினும், 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட 2 திட்டங்களையும்விட மலிவான விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் தினசரிக்கு டேட்டா கிடைக்காது. மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல எஸ்எம்எஸ்களும் குறைவாகவே கிடைக்கும். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், மொத்தமாக 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அந்த நாட்கள் முழுவதும் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகையும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Cheapest Daily Data Plan With Unlimited Voice Now How Much Cost After Rs 249 Plan Removed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X