Home
News

இது தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. இனி ரூ.799 எதுக்கு.. ரூ.448-க்கு 84 நாட்கள்.. ஆனால், வாய்ஸ் கால்கள் மட்டும்!

ஜியோ நிறுவனத்தின் ரூ.799 விலையிலான திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இந்த திட்டமானது, 1.5 ஜிபி டேட்டா பிரிவின் கீழ் இருந்தது. ஆனால், அதில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டதால், இனிமேல் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று கஸ்டமர்கள் நினைத்தனர்.

ஆனால், அதன் பிறகு வேல்யூ திட்டங்களின் (Value Plan) கீழ் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டது. இப்போது, தேடிச் சென்று ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. எப்படி பார்த்தாலும், 1.5 ஜிபி டேட்டாவுடன் மலிவு விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருப்பதால், நீக்கப்பட்டதாக கஸ்டமர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இது தெரியாம பண்ணாதீங்க.. ரூ.799 எதுக்கு.. ரூ.448-க்கு 84 நாட்கள்!

உண்மையில், உங்களுக்கு தினசரி டேட்டா தேவையில்லை என்றால், இதைவிட மலிவான விலைக்கு வேறொரு திட்டம் இருக்கிறது. ஆனால், இது வாய்ஸ் ஒன்லி திட்டமாகும். ஆகவே, நீங்கள் டேட்டாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே பெற்று கொள்ள முடியும். இதன் விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ மலிவான 84 நாட்கள் திட்டம் (Jio Cheapest 84 Days Plan): டேட்டா இல்லாத திட்டங்களின் கீழ் அடிமட்ட விலைக்கு இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.448ஆக மட்டுமே இருக்கிறது. இது ரூ.799 விலை கொண்ட திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் விலை கம்மியாக இருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப சலுகையையும் கொடுக்கிறது.

இதில் 1 ஜிபி டேட்டா கூட கிடைக்காது. வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும். ஆகவே 84 நாட்கள் முழுவதும் நீங்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். ஆனால், தினமும் 100 என்ற கணக்கில் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது.

மொத்தமாகவே 1000 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும். இதற்கு எந்த ஒரு லிமிட்டும் கிடையாது உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் வேண்டுமென்றாலும் அனுப்பி கொள்ளலாம். அதேபோல 200 எஸ்எம்எஸ் வேண்டுமென்றாலும் அனுப்பிக் கொள்ளலாம். இல்லையென்றால், 10 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி கொள்ளலாம்.

ஆனால், 84 நாட்களுக்கு முன்பாக 1,000 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி விட்டால், அதன் பிறகு கட்டணம் செலுத்தியே எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். இந்த 2 சலுகைகள் மட்டுமே இதில் முக்கியமாக கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது.

ஆனால், பெயருக்கு மட்டுமே கிடைப்பதால், பிரீமியம் சலுகைகளை இதில் பெற முடியாது. ஆகவே, டேட்டா அல்லாத திட்டங்களின்படி இது மட்டுமே 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இதேபோல வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை கொடுக்கும் மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்கிறது.

ஜியோ மலிவான 336 நாட்கள் திட்டம் (Jio Cheapest 336 Days Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் விலை ரூ.1,748ஆக இருக்கிறது. இந்த விலைக்கு வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே எஸ்எம்எஸ் சலுகைகள் மொத்தமாக கொடுக்கப்படும்.

இது 3600 எஸ்எம்எஸ்களாக உங்களுக்கு கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்களை, அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களாக செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய ஜியோ வெப்சைட் அல்லது ஜியோ ஆப்-க்கு சென்று வேல்யூ திட்டங்களின் கீழ் இருக்கும் வாய்ஸ் ஒன்லி பேக்குகளுக்கு செல்ல வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Cheapest 84 Days Validity Plan With Unlimited Voice Calls Check Voice Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X