இனி அந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி கிடையாது: ஜியோ அறிவிப்பு., வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

|

ஜியோ வழங்கி வந்த தினசரி 2 ஜிபி திட்டம் இனிமேல் கிடையாது என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் ரூ.251-திட்டம்

ஜியோவின் ரூ.251-திட்டம்

ஜியோவின் ரூ.251-திட்டம் ஆனது லாக்டவுனின் ஆரம்ப நாட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வேறு எந்த நன்மைகளையும் வழங்காமல் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 56நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வெளிவந்தது. ஆனால் இப்போது ரூ.251 திட்டத்தில் அதே நன்மைகள் வழங்கப்படவில்லை, திருத்தப்பட்டது.

 ஜியோவின் ரூ.151 ஆட்-ஆன் பேக்

ஜியோவின் ரூ.151 ஆட்-ஆன் பேக்

மேலும் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் ரூ.151 ஆட்-ஆன் பேக் ஆனது தினசரி வரம்புகள் இல்லாமல் மொத்தமாக 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இதேபோல ரூ.201 பேக் ஆனது தினசரி வரம்பு இல்லாமல் 40ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!ஏர்டெல் அட்டகாச திட்டங்கள்: தினசரி 2 ஜிபி ரூ.99, ரூ.129, ரூ.199 மட்டும்!

தினமும் 2ஜிபி டேட்டா

தினமும் 2ஜிபி டேட்டா

அதேபோல் திருத்தப்பட்ட ரூ.251-பேக் ஆனது 50ஜிபி என்கிற மொத்த டேட்டா நன்மைகளுடன் வெளிவருகிறது. முன்னதாக 56நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா என்கிற கணக்கில் மொத்தம் 112ஜிபி டேட்டாவை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.251 4ஜி டேட்டா வவுச்சர்

ரூ.251 4ஜி டேட்டா வவுச்சர்

அதன்பிறகு ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து ரூ.251 4ஜி டேட்டா வவுச்சரை வாங்கியபோது, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும், அதுவும் 51 நாட்களுக்கு. அதாவது மொத்தம் 102 ஜிபி அளவிலான மொத்த டேட்டா கிடைத்தது. வாடிக்கையாளர்களிடம் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வொர்க் ஃப்ரம் ஹோம் பிரிவு

வொர்க் ஃப்ரம் ஹோம் பிரிவு

வொர்க் ஃப்ரம் ஹோம் பிரிவின் கீழ் வழங்கப்படும் இந்த திட்டத்தில் வரம்பற்ற 50 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலமானது தங்களது ஆக்டிவ் பிளா் முடிவடையும் வரை இருக்கும். அதேபோல் இந்த திட்டமானது வாடிக்கையாளர்கள் ஆக்டிவ் செய்திருக்கும் திட்டத்தின் மேல் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் தான் தினசரி 2 ஜிபி டேட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் குறித்து பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 365நாட்கள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகாம் டாக் வலைதளத்தின் அறிவிப்பு அடிப்படையில் இந்த திட்டம் ஜியோ அல்லாத மற்றநெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்பு நன்மைகளை பற்றி சரியாக விவரங்கள் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் இருப்பதால் பலர் இதை தேர்வு செய்ய விரும்புவார்கள்.

ஜியோவின் மற்றொரு திட்டமான 2121

ஜியோவின் மற்றொரு திட்டமான 2121

இதேபோல ஜியோவின் மற்றொரு திட்டமான 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

IRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து?IRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து?

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
jio changed rs.251 4g data voucher plan benefits, no more daily 2 gb data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X