Home
News

ஜியோ கொண்டாட்ட பேக்: இலவச 8ஜிபி டேட்டா அனைவருக்கும்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச 4ஜி டேட்டா சேவையை பயனர்களுக்கு வழங்குகிறது.

By Sharath

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச 4ஜி டேட்டா சேவையை பயனர்களுக்கு வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 2 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் பயனர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்தக் கொண்டாட்ட சலுகையில் இலவச சலுகைகளும் பயனர்களுக்கு வழங்க படுகிறது என்பது தான்.

ஜியோ கொண்டாட்ட பேக்: இலவச 8ஜிபி டேட்டா அனைவருக்கும்.!

ஜியோ நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனம் காம்ப்ளிமெண்ட்ரி டேட்டா பேக்களை செப்டம்பர் 11,2018 வரை அனைத்து ஜியோ பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

கொண்டாட்ட பேக்

கொண்டாட்ட பேக்

ஜியோ கொண்டாட்ட பேக், பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி, 4ஜி டேட்டா பயன்பாட்டை வழங்குகிறது. இந்தக் கொண்டாட்ட பேக் நன்மைகள் மாறுபட்ட பயனர்களுக்கு மாறக்கூடும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகாம் டாக் அறிக்கையின்படி, டெல்கோ செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 2ஜிபி என்ற விதத்தில் வழங்கப்படும் இத்துடன் இந்தச் சேவை குறிப்பிட்ட வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ பயனர்கள் அனைவருக்கும்

ஜியோ பயனர்கள் அனைவருக்கும்

இந்த சலுகை ஜியோ பயனர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை உங்களுக்கும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, மை ஜியோ ஆப் ( MyJio app) சென்று மை பிளான்ஸ்(My Plans) மெனுவிற்கு சென்று உங்களுக்கான ஜியோ கொண்டாட்ட பேக் இன் தினமும் 2ஜிபி டேட்டா சேவையை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜியோ டைரி மில்க் ஆஃபர்

ஜியோ டைரி மில்க் ஆஃபர்

ஜியோ கொண்டாட்டத்தின் கொண்டாட்ட அன்பளிப்பாக ஜியோ பயனர்களுக்கு இலவச 1ஜிபி டேட்டா டைரி மில்க் சாக்லேட் உடன் ஜியோ நிறுவனம் வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த சலுகைக்கு ஜியோ நிறுவனம் ஜியோ டைரி மில்க் ஆஃபர் என்று பெயரிட்டுள்ளது. நீங்கள் வாங்கும் டைரி மில்க் சாக்லேட் ரப்பர் கவரை நீங்கள் உங்கள் ஜியோ ஆப் மூலம் படம் பிடித்தல் போதும், உங்கள் ஜியோ பாலன்ஸ் அக்கௌன்ட் இல் 1ஜிபி 4ஜி இலவச டேட்டா ஏறிவிடுகிறது.

2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது. இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் ,ஆற்றும் அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ் என அனைத்துச் சேவையையும் பயனர்களுக்கு அன்லிமிடெட்டாக வழங்கி முன்னிலை நிறுவனமாக மாறியது. இந்திய சந்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம் தற்பொழுது தனது 2 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் உற்சாகமாய் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Celebrations Pack offers 2GB data per day until September 11 How to check : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X