ஜியோவின் "8 ஜிபி இலவச டேட்டா"வை பெறுவது எப்படி?
இந்த ஆண்டிற்கான முதல் கொண்டாட்ட திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனம், இந்த ஆண்டிற்கான தனது கொண்டாட்ட சலுகைகளை அறிமுகம் செய்யத் துவங்கிவிட்டது. இந்த ஆண்டிற்கான முதல் கொண்டாட்ட திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய கொண்டாட்ட திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி இலவச 4ஜி டேட்டா வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ கொண்டாட்டம்
ஜியோ நிறுவனம் இந்த ஆண்டிற்கான கொண்டாட்டத்தை, அதன் பயனர்களுடன் கொண்டாடத் துவங்கிவிட்டது. கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பாய் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு இலவச டேட்டா வழங்கத் திட்டமிட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

தினமும் 2 ஜிபி இலவசம்
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த புதிய கொண்டாட்ட திட்டத்தின் கீழ், ஜியோ பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி இலவச 4ஜி டேட்டா 4 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு மொத்தம் 8ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி இலவச டேட்டா
முதலில் ஜியோ பிரைம் பயனர்களுக்கு மட்டும், இந்த ஜியோ கொண்டாட்ட திட்டத்தின் 8ஜிபி இலவச டேட்டா கிடைக்குமென்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பிற பயனர்களுக்குக் கிடைக்குமென்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த இலவச ஜியோ திட்டத்தை நீங்களும் பெற இதைச் செய்யுங்கள்.

மை ஜியோ ஆப்
ஜியோ கொண்டாட்ட திட்டத்தை நீங்கள் பெறுவதற்கு முதலில் உங்களிடம் மை ஜியோ ஆப் இருபது அவசியம். அப்படி உங்களிடம் ஜியோ ஆப் இல்லை என்றால் உடனே கூகுள் பிளே ஸ்டோர் சென்று உங்களின் மை ஜியோ ஆப் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

"மை பிளான்ஸ்"
டவுன்லோட் செய்யப்பட்ட ஜியோ செயலியில் உங்கள் ஜியோ எண்ணைப் பதிவு செய்து, உங்கள் அக்கௌன்ட்டை ஓபன் செய்துகொள்ளுங்கள். உங்களின் மை ஜியோ செயலியின் இடது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, அதனுள் உள்ள "மை பிளான்ஸ்" கிளிக் செய்து "கரண்ட் பிளான்" கிளிக் செய்யுங்கள்.

வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்
இந்த முறைப்படி உங்களுக்கான ஜியோவின் இலவச கொண்டாட்ட திட்டம் ஆக்டிவேட் ஆகியுள்ளதாக என்று தெரிந்துகொள்ளலாம். கொண்டாட்ட திட்டம் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகி இருந்தால் உங்களின் இலவச டேட்டா விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் இந்த கொண்டாடட்ட திட்டத்தின் கீழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








