Home
News

கூரை பிச்சிக்க ஆஃபர்.. வெறும் ரூ.100 ரீசார்ஜ்.. 2 மாசம் இலவசம்.. 9ஆவது ஆண்டில் ஜியோ.. Jio யூசர்களுக்கு யோகம்!

ஜியோ நிறுவத்தின் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களில் இலவச சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், புது ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்களிடம் ரூ.100 இருந்தால் போதும், ஆட்-ஆன் பேக் மூலம் அந்த ஒட்டுமொத்த சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகை மற்றும் 9ஆவது ஆண்டு விழா சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 100 திட்ட விவரங்கள் (Jio Rs 100 Plan Details): இந்த திட்டத்தை பெறுவதற்கு உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இதன் சலுகைகளை பார்க்கையில், 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் 5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும்.

கூரை பிச்சிக்க ஆஃபர்.. வெறும் ரூ.100 ரீசார்ஜ்.. 2 மாசம் இலவசம்!

இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமே இதுவரையில் கிடைத்துவந்தன. ஆனால், இதே திட்டத்தில் 9ஆவது ஆண்டு விழா சலுகைகளும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, அதிக செலவு இல்லாமல், ரூ.100 மூலம் கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அப்படியென்ன சலுகைகள் கிடைக்கிறது.

ஜியோ 9ஆவது ஆண்டு கொண்டாட்ட ஆஃபர் (Jio 9th Year Celebration Offer): இதில் அதிகப்படியான சலுகையாக ஜியோஹோம் (JioHome) இருக்கிறது. இதை 2 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பிராட்பேண்ட் டேட்டா, ஓடிடி (OTT) மற்றும் லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சலுகையும் கிடைக்கிறது.

ஆகவே, இதற்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் வை-பை ரூட்டர் போன்ற டிவைஸ்களும் கிடைக்கும். அதேபோல இது புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, இதுவரையில் நீங்கள் ஜியோஹோம் திட்டங்களை பெறாத கஸ்டமர்களாக இருந்தால், இந்த சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதுபோக பல்வேறு சலுகைகள் இருக்கிறது.

ஜியோ பைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கும் இந்த திட்டம் மூலம் சலுகை கிடைக்கிறது. ஆகவே, 2 சதவீத கோல்டு இலவமாக கொடுக்கப்படும். அதாவது, நீங்கள் வாங்கும் டிஜிட்டல் கோல்டின் மொத்த அடிப்படையில் இருந்து 2 சதவீதம் கூடுதலாக கொடுக்கப்படும். இதற்காக மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும்

ஆகவே, நீங்கள் 91-8010000524 என்னும் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து கூடுதலாக டிஜிட்டல் கோல்டு பெற்று கொள்ளலாம். ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் ஷாப்பிங் செய்யும் கஸ்டமர்களாக இருந்தால், உங்களுக்கு குறிப்பிட்ட எலக்ட்ரானிக் பொருட்களில் ரூ.399 மதிப்பில் சலுகை கொடுக்கப்படும். அதேபோல அஜியோ (Ajio) மூலம் ஆஃபர் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.1000 மதிப்பில் ஆர்டர் செய்தால் அதில் ரூ.200 பிளாட் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் இதில் சலுகைகள் கிடைக்கின்றன. சோமேட்டோ கோல்டு (Zomato Gold) சந்தாவை 3 மாதங்களுக்கு இதில் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், நெட்மெட்ஸ் ஃபர்ட்ஸ் மெம்பர்ஷிப் (Netmeds First Membership) 6 மாதங்களுக்கு கிடைக்கிறது. இதுபோக ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) ஆப் மூலம் உள்நாட்டு விமான டிக்கெட் புக்கிங் மற்றும் ஹோட்டல் புக்கிங்களில் ரூ.2,220 மதிப்பில் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 15 சதவீத ஆஃபரை இதில் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா 1 மாதத்துக்கு கிடைக்கிறது. இந்த ஒட்டுமொத்த சலுகைகளையும் நீங்கள் ரூ.100 செலவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதில் அந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகள் மட்டுமால்லாமல், கூடுதலாகவும் சலுகை கிடைக்கிறது. ஆட்-ஆன் திட்டம் வேண்டாம் என்றால், ரூ.349 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்து இந்த சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Celebration Add-on Pack Available At Rs 100 With 30 Days Validity 5GB Data Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X