Home
News

நான் 100% வியாபாரி.. Jio பிஸ்னஸ் பிளான்.. 100Mbps ஸ்பீட்ல 1200GB டேட்டா.. கனவுல கூட கிடைக்காத விலைக்கு!

பொதுமக்களுக்கு டெய்லி டேட்டா, டோட்டல் டேட்டா என்று அள்ளிக்கொடுப்பது மட்டுமின்றி - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது தனது ஜியோபிசினஸ் (JioBusiness) சேவையின் கீழ் வணிகங்களுக்கான டேட்டாவையும் அள்ளி கொடுக்கிறது

இந்நிறுவனம் அதன் ஜியோபிசினஸ் போர்ட்போலியோவின் கீழ் பல்வேறு கனெக்டிவிட்டி சொல்யூஷன்களை வழங்குகிறது. இதன் கீழ் சிறிய அலுவலகங்களுக்கு கிடைக்கும் மிகவும் முக்கியமான விருப்பங்களில் ஒன்று - ஜியோ பிசினஸ் பிராட்பேண்ட் மேக்ஸ் 801 திட்டம் (Jio Business Broadband Max 801 Plan) ஆகும்.

நான் 100% வியாபாரி.. Jio பிஸ்னஸ் பிளான்.. 100Mbps ஸ்பீட்ல 1200GB!

இது 100 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட் உடன் 1200ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. கூடவே வொர்க்பிளேஸ் டூல்களையும் (workplace tools) வழங்குகிறது. டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், அதாவது 1200ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 1 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்

ஜியோ பிசினஸ் பிராட்பேண்ட் மேக்ஸ் 801 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்ற நன்மைகள்:
ஜியோ அட்டென்டன்ஸ் லைசன்சஸ் (JioAttendance Licenses) - 5
ஜியோமீட் லைசன்சஸ் (JioMeet Licenses) - 1
ஜியோகேட் சந்தா (JioGate Subscription) - 1
ஸ்டாட்டிக் ஐபி (Static IP) - சேர்க்கப்படவில்லை
டேட்டா அலோவன்ஸ் உடனான ஹை ஸ்பீட் இன்டர்நெட் (High Speed Internet with Data Allowance)

யாருக்கெல்லாம், எந்த மாதிரியான பிஸ்னஸிற்கு எல்லாம் இது பொருத்தமானதா இருக்கும்? ஜியோ பிஸ்னஸ் மேக்ஸ் 801 திட்டமானது - சிறிய குழுக்கள் மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்; அதுபோன்ற குழுக்கள் அல்லது பிஸ்னஸிற்கு - அன்றாட நடவடிக்கைகளுக்கான அடிப்படை டிஜிட்டல் டூல்களுடன் நம்பகமான பிராட்பேண்ட் இணைப்பு தேவை, அதை மேக்ஸ் 801 பிளான் வழங்குகிறது.

இது வீடியோ மீட்டிங், கிளவுட் அணுகல், டாக்குமெண்ட் பகிர்வு மற்றும் அன்றாட இணைய பயன்பாடு போன்ற வழக்கமான வணிக நடவடிக்கைகளை எளிதாக கையாளும் ஒரு திட்டமாகும். மேலும் நீங்கள் டேட்டா வரம்பை அடைந்தாலும் கூட இண்டர்நெட் கனெக்ஷன் தொடர்ந்து செயலில் இருக்கும்; ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி, ஸ்பீட் 1எம்பிபிஎஸ் ஆக மட்டுமே இருக்கும்

இதன் மூலம் சிறு வணிகங்கள் தங்களுக்கு கிடைத்த முதன்மை மாதாந்திர டேட்டா ஒதுக்கீட்டை தீர்த்த பிறகும் கூட தொடர்ந்து இண்டர்நெட்டை பெறுவதை உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் இயல்புநிலை (Deafault) ஆக ஒரு நிலையான ஐபி முகவரி (static IP address) இல்லை. சர்வர்களை ஹோஸ்ட் செய்வதற்கு அல்லது மேம்பட்ட நெட்வொர்க்கிங் தேவைகளுக்கு நிலையான ஐபி தேவைப்படும் வணிகங்களுக்கு இது சரிப்பட்டு வராது.

ஜியோ பிசினஸ் என்றால் என்ன? ஜியோ பிசினஸ் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவன மற்றும் எஸ்எம்இ இணைப்பு பிரிவின் ஒரு பகுதியாகும். இதன்கீழ் ஜியோ நிறுவனமானது வெறுமனே இணைய சேவைகளை மட்டும் வழங்குவதற்கு பதிலாக, பணியிட தொடர்பு மற்றும் மேலாண்மை கருவிகளுடன் கம்பைன் கனெக்ட்விட்டியை வழங்கும் தொகுக்கப்பட்ட சொல்யூஷன்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

ஜியோ பிசினஸ் பிராட்பேண்ட் மேக்ஸ் 801 பிளான் போன்ற திட்டங்கள், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டு மேலாண்மைக்காக டிஜிட்டல் தளங்களை படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை இலக்காக கொண்டுள்ளன. ஜியோமீட் மற்றும் ஜியோஅட்டெண்டன்ஸ் போன்ற ஒருங்கிணைந்த சேவைகள் ஆனது இந்த திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதால், வணிகங்கள் பல மூன்றாம் தரப்பு தளங்களை நம்பாமல் அத்தியாவசிய வொர்க்பிளேஸ் டூல்களை அணுகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Business Broadband Max 801 Plan With 100 Mbps Speed 1200GB Monthly data Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X