ஜியோ பிராட்பேண்ட்டின் விலை மற்றும் டெபாசிட் தொகை விவரம் வெளியானது.!

அதுவும் அந்த திட்டமானது ரூ.1,000/-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளதால், நாமும் தயாராகிக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

|

இலவசமாக தொடங்கி கட்டண திட்டங்களாக உருமாறிய பின்னரும் கூட, வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, அதன் அடுத்தகட்ட புரட்சிகர திட்டத்திற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.

ஜியோ பிராட்பேண்ட்டின் விலை மற்றும் டெபாசிட் தொகை விவரம் வெளியானது.!

அதுவும் அந்த திட்டமானது ரூ.1,000/-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளதால், நாமும் தயாராகிக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது, அதாவது உங்கள் பட்ஜெட்டில் ஒரு 1000 ரூபாயை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.!

வெளியாகப்போவது என்ன சேவை.?

வெளியாகப்போவது என்ன சேவை.?

சந்தேகத்திற்கே இடமின்றி வெளியாகப்போவது ஜியோவின் பிராட்பேண்ட் திட்டம் தான். சுமார் 100Mbps வேகத்திலான டேட்டாவை வழங்குமென்று எதிர்பார்க்கப்படும் ஜியோவின் இந்த புதிய சேவையானது. ஜியோ 4ஜி சேவையை போன்றே இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஒரு எழுச்சியை உண்டாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.?

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.?

நிறுவனத்தின் இந்த பைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ், வீடியோ அழைப்புகள், அதிவேக இன்டர்நெட் இணைப்பு மற்றும் குரல் அழைப்பு ஆகிய நன்மைகள் அணுக கிடைக்கும். ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பை நகரங்களில், இந்த ஜியோ பைபர் ஆப்டிக் இணைப்புகளை பரிசோதிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களின் நிலைப்பாடு என்ன.?

போட்டியாளர்களின் நிலைப்பாடு என்ன.?

ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது உறுதியாகிவிட்ட பட்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்தி ஏர்டெல் நிறுவனம், 30 Mbps வேகத்திலான அதன் 1200 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ..2,199/- திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் வழக்கமான நன்மைகளை தவிரித்து, வின்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் டிவி போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.

ஏர்டெல்-ன் நன்மைகள் ஜியோவை தாக்குப்பிடிக்குமா.?

ஏர்டெல்-ன் நன்மைகள் ஜியோவை தாக்குப்பிடிக்குமா.?

ஜியோவிற்கு எதிரான போட்டித்தன்மைமிக்க திட்டங்களை வழங்கி, இன்றும் நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்கிற பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ள பார்தி ஏர்டெல், ரூ.2,199/- உடன் மேலும் இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது. அது ரூ.1,099/- மற்றும் ரூ.1299/- ஆகும். இந்த திட்டங்கள் அமேசான் ப்ரைம் சந்தாவுடன் சேர்த்து லேண்ட்லைன் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை இணைந்து வழங்கி வருகிறது.

ஜியோபைபர் எப்போது அறிமுகமாகும்.?

ஜியோபைபர் எப்போது அறிமுகமாகும்.?

இதுவரை வெளியான தகவல்களின் படி, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜியோ அதன் பைபர்-டூ-தி-ஹோம் (FTTH) சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, ஆனால் சரியான தேதிககள் சார்ந்த வார்தைகள் இல்லை. இந்த சேவையின் தொகுக்கப்பட்ட கட்டணங்கள் சார்ந்த கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. எது எப்படியாகினும் ஒரு மாதத்திற்கு ரூ.1,000/-க்கும் குறைவான விலை நிர்ணயமே தொகுக்கப்படும் என்று மிகவும் உறுதியாக நம்பப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
செக்யூட்டிடி டெபாசிட் ஏதேனும் உண்டா.?

செக்யூட்டிடி டெபாசிட் ஏதேனும் உண்டா.?

ஆம். ரிலையன்ஸ் ஜியோவின் பைபர் பிராட்பேண்ட் சேவையை அணுகும் போது (வேலியான்ன தகவல்களின் படி) பயனர்கள் ரூ.4,500/- என்கிற பாதுகாப்பு வைப்பு நிதியை செலுத்த வேண்டியதாக இருக்கும். மேலும் பல ஜியோ ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio to Bundle 100 Mbps Broadband Plan With Video and Voice Calls at Less than Rs 1,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X