Jio ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம்.. அமேசான் பிரைம் சந்தா.. என்னென்ன நன்மைகள்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி?
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அதாவது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் தான் அமேசான் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அமேசான் பிரைம், அதிக டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய இரண்டு தளங்களின் சந்தா வழங்குகிறது ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), கூகுள் ஜெமினி ப்ரோ, மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா போன்ற சலுகைகளும் இந்த ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








