Home
News

ரூ.200-க்கு கீழ் இவ்வளவு டேட்டா கொடுக்குறாங்களா- ஜியோ, பிஎஸ்என்எல் பயனரா நீங்கள்: இது தெரியாமா போச்சே!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் டேட்டா, குரலழைப்பு சலுகையோடு கூடுதல் அணுகலையும் வழங்கி வருகிறது. இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் குறைந்த விலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. ஜியோ, பிஎஸ்என்எல் பயனர்களுக்கு நிறுவனங்கள் ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

போட்டிப்போடும் வகையில் பல்வேறு திட்டங்கள்

போட்டிப்போடும் வகையில் பல்வேறு திட்டங்கள்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இருப்பினும் ப்ரீபெய்ட் திட்டத்தை பொறுத்தவரையில் பிஎஸ்என்எல் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிப்போடும் வகையில் அனைத்து திட்டங்களையும் கொண்டுள்ளது. ப்ரீபெய்ட் திட்டங்களில் போட்டிப்போடும் வகையிலான அனைத்து திட்டங்களையும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்து வருகிறது. இதில் ஜியோ, பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.200-க்கு குறைவான திட்டங்களை பார்க்கலாம்.

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல்

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல்

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் 4ஜி திட்டங்களில் ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் திட்டங்களை பார்க்கலாம். முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவுடன் பிஎஸ்என்எல் கடும் போட்டியை வழங்கும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. மலிவான திட்டங்களை சிறந்த நன்மைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இதில் ரூ.200-க்கு குறைவான இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் சிறந்த 4ஜி திட்டங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் சிறந்த 4ஜி தரவுத் திட்டம்

பிஎஸ்என்எல் சிறந்த 4ஜி தரவுத் திட்டம்

பிஎஸ்என்எல் சிறந்த 4ஜி தரவுத் திட்டம் குறித்து பார்க்கையில் இதில் ரூ.200-க்கு கீழ் எஸ்டிவி 198 திட்டம் ஆகும். இந்த பிஎஸ்என்எல் வவுச்சர் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. இருப்பினும் பிஎஸ்என்எல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த திட்டத்தை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. எஸ்டிவி-198 வுவச்சர் அதன் பெயர் குறிப்பிடுவது போல் ரூ.198 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டேட்டா திட்டமாகவே இருக்கிறது.

54 நாட்கள் வேலியிட்டி

54 நாட்கள் வேலியிட்டி

பிஎஸ்என்எல் ரூ.198 விலை திட்டமானது 54 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டம் ஒரு தரவு திட்டமாகும். இதில் பயனர்களுக்கு எந்த அழைப்பு நன்மைகளையும் நிறுவனம் வழங்காது. அழைப்பு நன்மைகளுடன் மற்றொரு திட்டம் இருந்தால் மட்டுமே இந்த திட்டம் தேர்வு செய்வது அர்த்தம் உள்ளதாக இருக்கும். நிறைய தரவுகளை பயன்படுத்துவோர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த வவுச்சர் பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு பிஎஸ்என்எல் அழைப்பாளர் டியூன்களையும் நிறுவனம் வழங்குகிறது. 4ஜி தரவு திட்டத்தில் இது மொத்தம் 108ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த 4ஜி டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த 4ஜி டேட்டா திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த 4ஜி டேட்டா திட்டத்தின் விலை ரூ.200-க்கு கீழ் ரூ.151 விலை திட்டமாகும். இந்த திட்டம் பயனர்களுக்கு 30 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் தரவு நன்மையை தவிர இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வேறு எந்த நன்மையும் கிடைக்காது. காம்போ திட்டங்களில் போதுமான தரவு கிடைக்காத நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தை தேர்வு செய்யும்போது இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இது ஒரு முழுமையான செல்லுபடியாகும் காலத்திற்கு டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. குரலழைப்பு போன்ற நன்மைகளுக்கு தேர்வு செய்து கூடுதலாக டேட்டா தேவைப்படும் இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கிறது.

இரண்டும் தரவு திட்டங்கள்

இரண்டும் தரவு திட்டங்கள்

இரண்டு திட்டங்களையும் ஒப்பீடு செய்து மதிப்பீடு செய்வது மிகக் கடினமாகும். இரண்டு நிறுவனங்களும் வெவ்வேறு விலையில் திட்டங்களை வழங்குகிறது. இரண்டு தரவு திட்டமே ஆகும். குரலழைப்பு உள்ளிட்ட பிற திட்டங்களை தேர்வு செய்து கூடுதலாக தரவு தேவைப்படும் போது இந்த திட்டம் சிறந்த தேர்வாகும். பிஎஸ்என்எல் திட்டம் தினசரி வரம்பில்லாமல் தரவு வழங்குவதில் சிறந்ததாக இருக்கிறது. மேலும் ஜியோ மொத்த ஜிபி அளவை அதிகமாக வழங்கி வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் 4ஜி வழங்கல் இல்லை என்பது ஒரு சிறிய குறையாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio, BSNL Offers best recharge plans available for under Rs.200: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X