Home
News

ஜியோ அடிச்ச சிக்ஸர்.. ஆனா ஒரே பாலில் 7 ரன்.. வொர்ல்டு கப் 2023 ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்..

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முதல் நாளில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக 7 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஏழு திட்டங்களையும் ஜியோ ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து கிரிக்கெட் உலக கோப்பை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

ஒரே பாலில் சிக்ஸர் அடிப்பது போல, ஜியோ நிறுவனம் ஒரே நேரத்தில் 7 திட்டங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) நன்மையுடன் இணைத்து அறிமுகம் செய்துள்ளது. இவை இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.328 முதல் தொடங்கி ரூ.3178 வரை கிடைக்கிறது. இதன் பொருள் எல்லோருக்கும் ஏற்ற விலையில் விருந்து நிச்சயம் என்பதை குறிக்கிறது.

ஜியோ அடிச்ச சிக்ஸர்.. ஆனா ஒரே பாலில் 7 ரன்.. அதிரடியாக மெகா ட்ரீட்..

ரிலையன்ஸ் ஜியோ புதிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்கள்
2023 கிரிக்கெட் உலகக் கோப்பையை உங்கள் மொபைல் (Mobile), டிவி (TV), லேப்டாப் (Laptop) அல்லது டேப்லெட்டில் (Tablet) நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய இந்தத் திட்டங்களின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ஜியோ அறிமுகப்படுத்திய ஏழு திட்டங்களின் விலை ரூ. 328, ரூ. 331, ரூ. 388, ரூ. 598, ரூ. 758, ரூ. 808 மற்றும் ரூ. 3178 ஆகும். இப்போது அனைத்து திட்டங்களின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

ஜியோ ரூ 328 திட்டம் (Jio Rs 328 Prepaid Plan):
இந்த திட்டத்தில் பயனர்கள் 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறுகிறார்கள். கூடுதல் நன்மைகளாக ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) மற்றும் Disney+ Hotstar மொபைல் சந்தா 90 நாட்களுக்கு கிடைக்கிறது.

ஜியோ ரூ.331 திட்டம் (Jio Rs 331 Prepaid Plan)
ஜியோவின் ரூ.331 திட்டமானது 40ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema, JioCloud மற்றும் Disney+ Hotstar Mobile (90 நாட்கள்).

ஜியோ அடிச்ச சிக்ஸர்.. ஆனா ஒரே பாலில் 7 ரன்.. அதிரடியாக மெகா ட்ரீட்..

ஜியோ ரூ 388 திட்டம் (Jio Rs 388 Prepaid Plan)
ஜியோவின் ரூ 388 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் JioTV, JioCinema, JioCloud மற்றும் Disney+ Hotstar மொபைல் (90 நாட்கள்) கிடைக்கும்.

ஜியோ ரூ 598 திட்டம் (Jio Rs 598 Prepaid Plan)
இந்த ரூ 598 திட்டம் கிட்டத்தட்ட ரூ.388 திட்டத்தைப் போலவே உள்ளது. ஜியோவின் ரூ.388 திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்குப் பெறுகிறார்கள். கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema, JioCloud மற்றும் Disney+ Hotstar Mobile 1 வருடத்திற்கு கிடைக்கும்.

ஜியோ ரூ.758 திட்டம் (Jio Rs 758 Prepaid Plan)
ஜியோவின் ரூ.758 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை JioCloud, JioCinema, JioTV மற்றும் Disney+ Hotstar (90 நாட்கள்) நன்மையுடன் வழங்குகிறது.

ஜியோ ரூ.808 திட்டம் (Jio Rs 808 Prepaid Plan)
ஜியோவின் ரூ.808 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு சேவை செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் இணைந்த கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema, JioCloud மற்றும் Disney+ Hotstar (90 நாட்கள்) போன்றவை கிடைக்கிறது.

ஜியோ ரூ.3178 திட்டம் (Jio Rs 3178 Prepaid Plan)
ஜியோ வழங்கும் ரூ.3178 திட்டம், 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையுடன், இந்த திட்டம் JioCinema, JioTV, JioCloud மற்றும் Disney+ Hotstar போன்றவற்றை 1 வருடத்திற்கு வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Brings World Cup Cricket 2023 Best Prepaid Plan With Disney Hotstar Bundle Starting at Rs 328
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X