Home
News

வணக்கம்டி மாப்ள.. Jio-வுல இருந்து அம்பானி.. 2025 பிளான்கள்.. பழையபடி ரூ.210, ரூ.320 செலவு செஞ்சா போதும்!

ஜியோ (Jio) திட்டங்களின் மீது அறிவிக்கப்பட்ட விலை உயர்விற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் மொபைல் ரீசார்ஜ் செய்யவதற்காக நாமெல்லாம் ஒதுக்கிய பட்ஜெட்டில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது என்னவோ உண்மைதான். "2025 ஆம் ஆண்டிலும் கூட இதே நிலைதானா?" என்று கேட்பவர்களுக்கான பதிலே இந்த கட்டுரை. அதாவது பழையபடி ரூ.210, ரூ.320 செலவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் புதிய மற்றும் பழைய ரீசார்ஜ் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கவுள்ளோம்.

புதிய ரீசார்ஜ் திட்டம்: "என்ன அம்பானி சார்.. அவ்ளோ தானா?" என்று கேட்கும்படியாக.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஒரேயொரு புதிய திட்டத்தை மட்டுமே அறிமுகம் செய்தது. 2024 தீபாவளி பண்டிகை காலத்தின் போது, இந்நிறுவனம் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 4 ஆபர்களை அறிவித்து அதகளப்படுத்தியது.

Jio-வுல இருந்து அம்பானி.. பழையபடி ரூ.200, ரூ.300 செலவு செஞ்சா போதும்!

அதேபோல 2025 புத்தாண்டிற்கும் எக்கச்சக்கமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு ஒரேயொரு புதிய திட்டம் மட்டுமே கிடைத்தது. அது ரூ.2025 மதிப்புள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும். 200 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 500ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இது டெய்லி 2.5ஜிபி என்கிற அளவில் கிடைக்கும்.

மேலோட்டமாக பார்த்தால் ரூ.2025 ரீசார்ஜ் ஆனது மிகவும் விலை உயர்ந்த திட்டத்தை போல தெரியலாம். ஆனால் உண்மையில் இது மிகவும் லாபகரமான திட்டமாகும். அதெப்படி? 200 நாட்கள் என்கிற வேலிடிட்டியை மாதங்களாக பிரித்தால் 6.5 மாதங்கள் வரும். ரூ.2025 ஐ 6.5 மாதங்களுக்கான தனித்தனி மாதத்திற்கான செலவாக பிரித்தால் மாதந்தோறும் (தோராயமாக) 311 ரூபாய் 50 பைசா வரும்.

அதாவது ரூ.2025 திட்டத்தை ஆண்டுக்கு 2 முறை (அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை) என்று ரீசார்ஜ் செய்வதன் மூலம்.. மாதந்தோறும் ரூ.315 க்குள் என்கிற செலவின் கீழ் 1 ஆண்டு முழுவதும் டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை பெற முடியும்.

ஒட்டுமொத்தமாக ரூ.300 அல்லது ரூ.350 க்கு மேல் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் வழக்கத்தோடு ஒப்பிடும் போது ரூ.2025 திட்டமானது ஒரு நல்ல "சீப் அன்ட் பெஸ்ட் ஆப்ஷன்" ஆகும். கூடவே ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியத்தையும் நீக்குகிறது.

பழைய ரீசார்ஜ் திட்டங்கள்: ஒருவேளை உங்களுக்கு ரூ.2025 செலவு செய்யும் அளவிற்கு பட்ஜெட் இல்லை என்றால்.. மேலும் உங்களுக்கு லாங் வேலிடிட்டி தேவையில்லை என்றால்.. தேவைக்கு ஏற்ப, வெவ்வேறு வகையான விலைகளில், வெவ்வேறு அளவிலான நன்மைகளை வழங்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உங்களிடம் இருந்தால்.. கவலைப்பட வேண்டாம். 2025 இல் அதற்காகவும் சில பெஸ்ட் ஜியோ திட்டங்கள் உள்ளன.

முதல் திட்டம் - 22 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.209 ரீசார்ஜ். இதன் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டா என மொத்தம் 22ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

இரண்டாவது திட்டம் - 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.249 ரீசார்ஜ். இதன் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டா என மொத்தம் 28ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

மூன்றாது திட்டம் - 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.299 ரீசார்ஜ். இதன் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

நான்காவது திட்டம் - 22 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.239 ரீசார்ஜ். இதன் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 33ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

ஐந்தாவது திட்டம் - 18 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.199 ரீசார்ஜ். இதன் கீழ் டெய்லி 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 27ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

மேற்கண்ட 6 ஜியோ திட்டங்களுமே (புதிய ரூ.2025 உட்பட) இந்த 2025 ஆம் ஆண்டில் உங்களுடைய மொபைல் ரீசார்ஜ் பட்ஜெட்டில் ஓட்டை விழாமல் பார்த்துக்கொள்ளம் என்பதில் சந்தேகமே வேண்டாம். இவைகள் எல்லாம், இந்த 2025 ஆம் ஆண்டில் பட்ஜெட் வாசிகளுக்கான பெஸ்ட் திட்டங்களாக திகழ்கின்றன. இதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. மேற்கண்ட 6 திட்டங்களில் எது உங்களுக்கான பெஸ்ட் பிளான் என்பதை இனி நீங்கள் தான் முடிவு செய்து; ரீசார்ஜ் செய்ய வேண்டும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Best Recharge Plan 2025 For Prepaid Customers Who Dont Want to Spend More than Rs 320 Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X