84 நாட்களுக்கு பெஸ்ட் திட்டம் இது தான்.. விலையோ பட்ஜெட்டிற்குள்.. நன்மைகளோ டாப்பில்.. எது உங்களுக்கு வேண்டும்?

|

ரிலையன்ஸ் ஜியோ நடுத்தர கால பயன்பாட்டிற்கான ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான விருப்பங்களை வழங்குகிறது. அதைச் சேர்க்க, நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்கை வழங்குகிறது. இதன் விலை ரூ.200 விலைக்கு மேல் இருக்கிறது. நீங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து நடுத்தர காலத் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், 84 நாட்கள் திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல், 56 நாட்கள் திட்டங்கள் அவ்வளவு சிக்கனமானவை அல்ல என்பதனால், நீங்கள் 84 நாள் வேலிடிட்டியை தேர்வு செய்யலாம்.

56 நாட்கள் திட்டம் சிறந்ததா அல்ல 84 நாட்கள் திட்டம் சிறந்ததா?

56 நாட்கள் திட்டம் சிறந்ததா அல்ல 84 நாட்கள் திட்டம் சிறந்ததா?

பொதுவாகப் பயனர்கள் 56 நாட்கள் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள், ஆனால், சற்று அதிகமாகச் செலவழித்தால் உங்களுக்குக் கூடுதலாக 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. அப்படி கணிசமான விலையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறந்த 84 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் ஜியோ ரீசார்ஜ் திட்டம் 2022 பற்றி பார்க்கலாம். ஜியோவிடம் இருந்து கிடைக்கக்கூடிய சிறந்த திட்டங்கள் ஏராளமாக இருக்கிறது என்றாலும் கூட, நமக்கு வேண்டிய 84 நாள் கொண்ட திட்டங்களை அதன் முழு நன்மைகளுடன் பார்க்கலாம்.

ஜியோ ரீசார்ஜ் திட்டம் 2022 சிறந்த மதிப்பு உடன் 84 நாட்கள் செல்லுபடியாகும்

ஜியோ ரீசார்ஜ் திட்டம் 2022 சிறந்த மதிப்பு உடன் 84 நாட்கள் செல்லுபடியாகும்

நீங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ஜியோவின் ரூ. 666 ப்ரீபெய்ட் திட்டமானது இந்த 2022 ஆம் ஆண்டில் சிறந்த மதிப்பாகும். ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மேலும், அவை 1.5ஜிபி, 2ஜிபி மற்றும் 3ஜிபி உட்பட பல்வேறு தினசரி டேட்டா கேப்களுடன் வருகின்றன. வழக்கம் போல் டேட்டா அளவிற்கு ஏற்ப இந்த திட்டங்களின் விலைகள் வேறுபடுகிறது. இதில் பட்ஜெட் விலையில் நீங்கள் சிறந்த மதிப்பைக் கொண்ட திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ரூ.666 திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஜியோவின் முதல் 5ஜி போன் இது தான்: குருநாதா விலை கம்மியாக இருக்குமா? எப்போது அறிமுகம்?ஜியோவின் முதல் 5ஜி போன் இது தான்: குருநாதா விலை கம்மியாக இருக்குமா? எப்போது அறிமுகம்?

ஜியோ வழங்கும் ரூ. 666 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 666 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த ரூ. 666 திட்டமானது பட்ஜெட் விலையில் போதுமான நமைகளுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்தத் திட்டம் உங்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குக் கூடுதல் நன்மைகளாக ஜியோ வழங்கும் இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ வழங்கும் ரூ. 719 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 719 திட்டம்

அடுத்தபடியாக, ஜியோவிடம் இருந்து கிடைக்கும் சிறந்த 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களைப் பற்றிப் பார்க்கையில், ரூ. 719 விலையில் ஒரு ஜியோ திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குக் கூடுதல் நன்மைகளாக ஜியோ வழங்கும் இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?

ஜியோ வழங்கும் ரூ. 1199 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ. 1199 திட்டம்

இதேபோல், ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மற்றொரு திட்டம் பற்றி பார்க்கையில், இந்த திட்டம் உங்களுக்கு 3ஜிபி தினசரி டேட்டாவை ரூ.1199 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்குக் கூடுதல் நன்மைகளாக ஜியோ வழங்கும் இலவச நன்மைகளான jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

இரண்டு திட்டங்களுக்கும் மத்தியில் இவ்வளவு தான் வேறுபாடா?

இரண்டு திட்டங்களுக்கும் மத்தியில் இவ்வளவு தான் வேறுபாடா?

இந்தத் திட்டங்கள் மிகவும் விலையுயர்ந்த வரம்பிற்கு உட்பட்டவை, மேலும் 2ஜிபி தினசரி டேட்டா திட்டத்துடன், பயனர்கள் 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டத்துடன் ஒப்பிடுகையில் வெறும் 500 எம்பி மட்டுமே கூடுதல் டேட்டாவாக உங்களுக்கு ரூ. 719 திட்டத்தில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 666 திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் / நாளுக்கு என்ற விதத்தில் தினமும் ரூ.7.93 செலவழிக்கிறார்கள். அதேபோல், 2ஜிபி தினசரி டேட்டா மற்றும் 3ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்யும் போது முறையே தினமும் ரூ.8.56 மற்றும் ரூ.14.27 செலவழிக்கிறார்கள்.

பான் கார்டில் உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?பான் கார்டில் உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?

எது உங்களுக்கான சிறந்த திட்டம்?

எது உங்களுக்கான சிறந்த திட்டம்?

மேலே, குறிப்பிட்டுள்ளபடி முறையே ரூ.719 மற்றும் ரூ.1199 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே 84 நாட்கள் செல்லுபடியாகும் மதிப்பில் ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் என்றால் அது உங்களுக்கு பட்ஜெட்டிற்கு பங்கம் வைக்காத தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ. 666 திட்டமாகும். தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை பற்றாக்குறையாக இருக்கும் என்று கருதுபவர்கள், ஜியோவின் ரூ. 719 திட்டம் அல்லது ரூ. 1199 திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். உங்கள் தேவையை அறிந்து திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Best Recharge Plan 2022 With 84 Days Validity Details And Price List : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X