Jio ஹாட்ரிக் திட்டம்: ரூ.200 விலைக்குள் 3 பெஸ்ட் பிளான்.. தினமும் டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. என்ன விலை?
ரூ.200 விலைக்குள் தினமும் டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை போன்ற நன்மைகளுடன் இலவச நன்மையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் ஜியோ வழங்கும் இந்த 3 திட்டங்களை தான் தேர்வு செய்ய வேண்டும்.
ஜியோ இப்போது ரூ.200 விலை புள்ளிக்குள் 3 சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio Prepaid Recharge Plans Under Rs 200) திட்டங்களை வழங்குகிறது. இந்த 3 திட்டங்களை நாம் ஜியோவின் ஹாட்ரிக் திட்டம் (Jio Hattrick Plans) என்றே கூற கூறலாம். நீண்ட காலமாக பட்ஜெட் பிரியர்களின் (Budget Users) தேவையை பூர்த்தி செய்த திட்டங்களாக இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.200 விலைக்குள் பெஸ்ட்டாக 3 ஜியோ திட்டங்கள்:
சரி, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ரூ. 200 விலை புள்ளிக்குள் என்னென்ன திட்டங்களை, என்னென்ன நன்மைகளுடன் வழங்குகிறது என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். ஜியோ நிறுவனம் அதன் பட்ஜெட் பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக ரூ. 149, ரூ. 179 மற்றும் ரூ. 209 என்ற மூன்று திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த மூன்று திட்டங்களும் தினசரி 1GB டேட்டா நன்மையை வழங்குகிறது.
ஜியோ ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 149 Prepaid Plan):
ஜியோவின் இந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் இலவச நன்மையாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), நன்மைகள் பயன்படுத்த கிடைக்கிறது.

ஜியோ ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 179 Prepaid Plan):
இந்த திட்டம் மேலே கண்ட திட்டத்தின் அதே நன்மைகளை அப்படியே வழங்குகிறது. ஆனால், இதன் வேலிடிட்டி மட்டும் 24 நாட்களை கொண்டுள்ளது. இத்துடன் 1ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இத்துடன் இலவச நன்மையாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), நன்மைகள் பயன்படுத்த கிடைக்கிறது.
ஜியோ ரூ. 209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 Prepaid Plan):
இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டமும் 1ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இத்துடன் இலவச நன்மையாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), நன்மைகள் பயன்படுத்த கிடைக்கிறது.
இந்த மூன்று திட்டங்களும் ரூ. 200 விலை புள்ளிக்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதனால், மக்களிடையே அதிகமாக விரும்பப்படுகிறது. நீங்கள் ரூ.200 விலைக்குள் ஒரு சிறந்த திட்டத்தை தேர்வு செய்ய நினைத்தால் இந்த திட்டங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications