அப்படி போடு.. 300GB டேட்டா, Netflix, Prime சந்தா! ஒரே ரீசார்ஜ்ல ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஓஹோன்னு நன்மைகள்!
ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஓஹோன்னு (வாய்ஸ் + டேட்டா + எஸ்எம்எஸ் + ஓடிடி) நன்மைகளை வழங்கும் போஸ்ட்பெயிட் திட்டத்தை தேடும் பலரும் இந்த 2 திட்டங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். சுவாரசியமான விஷாதம் என்னவென்றால்.. இந்த இரண்டுமே ஜியோவின் திட்டங்களாகும்.
நாம் இங்கே விரிவாக பார்க்கவுள்ளது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 மற்றும் ரூ.1499 போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டங்களை ({Postpaid Recharge Plans) பற்றித்தான். இந்த இரண்டு திட்டங்களுமே இலவச நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவுடன் வருகின்றன. ஆனால் இந்த திட்டங்களில் ஸ்பெஷலாக கவிக்கப்பட வேண்டிய விஷயம் அதுமட்டுமல்ல!

இந்தத் திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை விரிவாக பார்ப்பதற்கு முன்னர், இவ்விரு திட்டங்களும் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபருடன் (Unlimited 5G Data Offer) வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஏர்டெல் 5ஜி சேவையின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டா அணுக கிடைக்கும். இதற்காக உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 3 பேமிலி சிம்களை வழங்கும். வாடிக்கையாளர்கள் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் ஒவ்வொரு பேமிலி சிம்மிற்கும் மாதம் ரூ.99 செலவாகும் மற்றும் அதனுடன் 5ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் முதன்மை பயனருக்கு 100 ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் பேசிக், அமேசான் பிரைம், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவைகள் கிடைக்கும், இதில் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவானது 1 வருட வேலிடிட்டியுடன் வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1499 போஸ்ட்பெயிட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 300ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் அடிஷனல் கனெக்ஷன் (Additional Connection) எதுவும் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Basic), அமேசான் பிரைம் (Amazon Prime), ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) உள்ளிட்ட தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.
அதனுடன், இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான சர்வதேச வைஸ் கால் (International Voice Calls) மற்றும் டேட்டா நன்மைகளையும் பெறுவார்கள். அமெரிக்காவை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் 5ஜிபி அதிவேக டேட்டாயும், 500 நிமிடங்களுக்கு இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் லோக்கல் கால்களை பெறுவார்கள்.
மறுகையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸை பொறுத்தவரை, ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 1 ஜிபி அதிவேக டேட்டாயும், 300 நிமிடங்களுக்கு இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் லோக்கல் கால்களை (300 minutes incoming and outgoing local calls) பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications