Home
News

3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.!

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனாலும் ஜியோ திட்டங்களில் மற்ற நெட்வொர்க் எண்களுடன் கால் செய்ய பேர் யூசேஜ் பாலிசி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. பின்பு ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற

குறிப்பாக ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும்அசத்தலான திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.555 திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 126 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஜியோ ரூ.777 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.777 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.777 திட்டம் ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு கூடுதலாக 5ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 131 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதன்பின்னர் டேட்டா FUP-க்கு பின்னர் 64 Kbps என்கிற இணைய வேகம் கிடைக்கும். குறிப்பாக வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது, தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. ஜியோவின் இந்த ரூ.777 திட்டத்தில் ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் VIP சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2ஜிபி டேட்டா

ஜியோ ரூ.599 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிட வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
jio best plans that provide 3000 minutes of voice call Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X