மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோவின் பலே திட்டம்!
வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் என பல தேவைகளுக்கு இணைய சேவை பிரதானமாக இருக்கிறது. இதில் ஜியோ வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டர்
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் திட்டங்கள் அனைத்து வகை பயனர்களையும் திருப்திப்படுத்தும் விதமான நன்மைகளை வழங்குகின்றன.

குறைந்த கட்டணத்தில் பல்வேறு திட்டங்கள்
ஜியோ குறைந்த கட்டணத்தில் பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சிறப்பு பெற்றது. அதன்படி ஜியோ வழங்கும் மூன்று காம்போ திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்களின் விலை ரூ.349, ரூ.401 மற்றும் ரூ.999 ஆகும். வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்த காலக்கட்டத்தில் இணைய சேவை பிரதானமாக இருக்கிறது. இதுபோன்ற பயனர்களுக்கு ஜியோவின் இந்த தேவை மிக பயனுள்ளதாக இருக்கும்.

ஜியோ ரூ.349 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 84ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்புகள், பிற நிறுவனங்களுக்கு 1000 நிமிட எஃப்யூபி நிமிட அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் வரும் ஜியோ ரூ.401 திட்டம்
ஜியோவின் ரூ.401 திட்டத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.401 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் ஒரு வருடத்திற்கான டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதோடு மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

வரம்பற்ற குரலழைப்பு வசதி
ஜியோவின் தினசரி 3ஜிபி டேட்டாவோடு கூடுதலாக மொத்தக் கணக்கில் 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்பு மற்றும் ஜியோவில் இருந்து பிற நிறுவனங்களுக்கு அழைப்பு மேற்கொள்ளும் போது 1000 நிமிட எஃப்யூபி வரம்பை வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.999 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விலை அதிகரித்து இருந்தாலும் மொத்தமாக 84 நாட்கள் இந்த திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 252 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவில் இருந்து பிற நிறுவனங்களுக்கு அழைப்பு மேற்கொள்ளும்போது 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications