Home
News

Jio யூசர்களே என்ஜாய்.. டெய்லி 3GB டேட்டா.. ரூ.597 Netflix, ரூ.35100 Google Gemini இலவசம்.. எந்த ரீசார்ஜ்?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆனது "நாட்டிலேயே பெஸ்ட் 3ஜிபி டெய்லி டேட்டா பிளான்களில் ஒன்றை கொண்டுள்ளது. சுவாரசியமாக அது டெய்லி 3GB டேட்டாவுடன் சேர்த்து ரூ.597 மதிப்பில்லை Netflix சந்தாவை இலவசமாக வழங்குகிறது; கூடவே ரூ.35100 மதிப்புள்ள Google Gemini சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது.

அது ஜியோவின் ரூ.1,799 ப்ரீபெய்ட் பிளான் ஆகும். இது 3 ஜிபி தினசரி டேட்டா பிரிவில் ஜியோவின் மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். ஆனால் கவனிக்க வேண்டிய ஒரு திட்டமும் கூட. இதை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றால் - இது 3ஜிபி டேட்டா + ஓடிடி + ஏஐ அணுகலை மட்டுமின்றி ஜியோவின் ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

Jio யூசர்களே என்ஜாய்.. 3GB டேட்டா.. Netflix, Google Gemini இலவசம்!

நெட்பிளிக்ஸ் சந்தாவை பொறுத்தவரை மாதத்திற்கு ரூ.199 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருவதால் உங்களுக்கு, 3 மாதங்களுக்கு ரூ.597 மதிப்புள்ள நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தா முற்றிலும் இலவசமாக கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,799 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் Netflix மட்டுமின்றி, இன்னொரு ஓடிடி சந்தாவும் கிடைக்கும். அது ஜியோவின் சிறப்பு சலுகைகளின் கீழ் கிடைக்கும் JioHotstar சந்தா ஆகும். ரூ.149 மதிப்புள்ள 3 மாதங்களுக்கான JioHotstar மொபைல் / டிவி சந்தாவும் கிடைக்கும்

மேலும் ஜியோ நிறுவனமானது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத ப்ரோ திட்டத்தையும் இலவசமாக வழங்குகிறது. பின்னர் ஜியோ நிறுவனமானது இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவை பயன்படுத்திய பிறகு இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.

ரூ.1799 உடன் சேர்த்து ஜியோவின் கீழ் உலா மேலும் இரண்டு திட்டங்களும் கூட பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன - அவைகள் ரூ.449 மற்றும் ரூ.1199 திட்டங்கள் ஆகும். மொத்தமாக இந்த 3 திட்டங்களுமே இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கின்றன, மேலும் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவை வழங்குகின்றன.

இலவச நெட்பிளிக்ஸ் உடனே வரும் ஜியோ ரூ.1299 திட்டம்: இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய "வழக்கமான" நன்மைகளை வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) உடன் சேர்த்து 3 மாதங்களுக்கான இலவச நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தாவையும் (Netflix Mobile Subscription) வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் எந்த வரம்பும் இல்லாமல் ட்ரூ 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் " லோ டேட்டா" அறிவிப்பை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு பிடித்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஸ்ட்ரீம் செய்யலாம். எல்லாவற்றை விட முக்கியமாக ரூ.1299 திட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கான இலவச கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் (Google Gemini Pro Subscription) கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Best Daily 3GB Data Plan With Free Netflix Google Gemini AI subscriptions Rs 1799 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X