Home
News

தலைவன் எப்போவுமே கிரேட்.. 2026 க்கு Jio பிளான்களை அடுக்கி தள்ளிய அம்பானி... எது உங்களுக்கு பெஸ்ட்?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த ஆண்டை போலவே இந்த 2026 ஆம் ஆண்டிலும் - டெய்லி ஹைஸ்பீட் டேட்டா, லாங் வேலிடிட்டி மற்றும் வழக்கமான நன்மைகளுடன் சேர்ந்து இலவசமாக கிடைக்கும் கூடுதல் நன்மைகளை வழங்கும் திட்டங்களுடன் அதன் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவை தொடர்கிறது.

தடையற்ற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வருடாந்திர பேக்குகள் (Annual Packs) முதல் அதிக டெய்லி டேட்டாவிற்கு முன்னுரிமை அளிக்கும் குறுகிய கால விருப்பங்கள் (Short-term options) வரை, ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது பரந்த அளவிலான பயனர்களை பூர்த்தி செய்யும் வகையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

2026 க்கு Jio பிளான்களை அடுக்கி தள்ளிய அம்பானி!

அப்படியாக தற்போது ஜியோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ட்ரூ 5ஜி அன்லிமிடெட் (True 5G Unlimited) திட்டங்களின் அடிப்படையில் - நன்மைகள், செல்லுபடியாகும் தன்மை மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை ஒன்றாக கருத்தில் கொள்ளும்போது சிறந்த ஒட்டுமொத்த மதிப்பை வழங்கும் 10 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன:

நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் 4 சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்: 1 முழு ஆண்டும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ரூ.3,999 திட்டம் - தனித்து நிற்கும் ஒரு ஆப்ஷன் ஆக இருக்கிறது. இது டெய்லி 2.5 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை தவிர்க்க விரும்பும், அதே சமயம் அதிக டேட்டாவை நுகரும் பயனர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

மற்றொரு வலுவான வருடாந்திர விருப்பம் ரூ.3,599 திட்டம் ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும், டெய்லி 2.5 ஜிபி தினசரி டேட்டாவையும் வழங்கும். இது ரூ.3,999-க்கான சற்றே விலை குறைந்த மாற்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் குறைந்த செலவில் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு ரூ.2,025 திட்டம் உள்ளது

ரூ.2,025 ஆனது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா உடன் 200 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இது [பட்ஜெட் விலையில் - நீண்ட கால செல்லுபடியாகும் காலம் மற்றும் அதிக டெய்லி டேட்டா நன்மை ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்துகிறது. கடைசியாக ரூ.1,799 திட்டம் உள்ளது. இது அதிக டேட்டா மற்றும் 3 மாத கால வேலிடிட்டி என்கிற காம்பினேஷனை தேடும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளது, இது தொகுக்கப்பட்ட ஓடிடி அணுகலுடன் 3 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

ஓடிடி சலுகைகள் உடன் 3 சிறந்த ஜியோ வேல்யூ திட்டங்கள்: ரூ.1,299 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும், ஓடிடி சந்தாக்களுடன் கூடிய 2ஜிபி டெய்லி டேட்டாவையும் வழங்குகிறது, இது பொழுதுபோக்கு சார்ந்த பயனர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. சற்று குறைந்த விலையில், ரூ.1,049 திட்டம் கிடைக்கிறது.

இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் 1 நாளைக்கு 2ஜிபி டேட்டவையும், சோனிலைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (Zee5) அணுகலையும் வழங்குகிறது. இது ஸ்ட்ரீமிங் கன்டென்ட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களை ஈர்க்கிறது. கடைசியாக ரூ.1,029 திட்டம் உள்ளது. இது 84 நாட்கள் செல்லுபடி மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் அமேசான் பிரைம் சலுகைகளும் அடங்கும்.

நடுத்தர மற்றும் குறுகிய கால மதிப்பு கொண்ட 3 சிறந்த ஜியோ திட்டங்கள்: ரூ.999 திட்டம் 2ஜிபி டெய்லி டேட்டாவுடன் 98 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது, பெரும்பாலான மிட்-ரேன்ஜ் பிளான்களுடன் ஒப்பிடும்போது இதன் நீண்ட செல்லுபடியாகும் காலத்திற்காக, ரூ.999 தனித்து நிற்கிறது.

இன்னும் குறுகிய கால வேலிடிட்டியை விரும்பும் பயனர்களுக்கு, ரூ.449 திட்டம் உள்ளது. இது 3ஜிபி டெய்லி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது ஒரு மாதத்திற்கான அதிக டேட்டா நுகர்வை வழங்கும் திட்டமாக உள்ளது. கடைசியாக ரூ.399 திட்டம் உள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது விலை மற்றும் தினசரி டேட்டா சலுகைகளுக்கு இடையில் சமநிலையை வழங்கும் ஜியோவின் பெஸ்ட் பிளான்களில் ஒன்றாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Best 2026 Plans Best long validity prepaid plans Value packs with OTT benefits Mid range and short term plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X