வள்ளல் பரம்பரை.. ரூ.240 க்கு வாரி வழங்கும் அம்பானி.. பட்ஜெட் வாசிகளுக்கான டெய்லி 1.5GB டேட்டா Jio பிளான்!
ரூ.300 க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் அளவிற்கு பட்ஜெட் இல்லையா? அதே சமயம் - டெய்லி 1 ஜிபி டேட்டாவை வைத்துக்கொண்டு உங்களுடை அன்றாட இண்டர்நெட் தேவைகளை சமாளிக்க முடியவில்லையா? கவலைய விடுங்க. நம்ம அம்பானி சாரின் ஜியோ (Jio) இருக்காப்டி!
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் பயனர்களுக்கு மிகவும் மலிவான விலைக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இது நீண்ட கால சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கவில்லை என்றாலும் கூட இது ஒரு மலிவான திட்டமாக இருப்பதால் - மிகவும் "அர்த்தமுள்ள" திட்டமாகவும் இருக்கிறது!

நாம் இங்கே பேசுவது ஜியோவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.239 திட்டத்தை பற்றித்தான். இது தான் இப்போது ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் என்ட்ரி லெவல் 1.5 ஜிபி டெய்லி டேட்டா ப்ரீபெய்ட் பிளான் (Entry-level 1.5GB daily data prepaid plan) ஆகும்.
ரூ.239 திட்டமானது ஒரே நேரத்தில் அதிக செலவு செய்ய முடியாதவர்களுக்கும், ஜியோவின் நெட்வொர்க்கிலிருந்து டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை அணுக வேண்டியவர்களுக்கும் ஏற்ற ரீச்சர் ஆக உள்ளது.
டெய்லி டேட்டா நன்மையுடன் சேர்த்து இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
ரூ.239 திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சேவைகளையும் இலவசமாக வழங்குகிர்து. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். அதாவது டெய்லி 1.5ஜிபி டேட்டா என்றால், உங்களுக்கு மொத்தம் 33ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும.
இதோடு முடியவில்லை - ரூ.250 க்குள் என்கிற பட்ஜெட்டில் உண்மையிலேயே இது ஏன் ஒரு நல்ல ரீசார்ஜ் ஆகும்? என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது! ஒருவேளை உங்களுக்கு 22 நாட்கள் வேலிடிட்டி என்பது இன்னும் ஒரு குறையாக தெரிந்தால், இன்றைய தேதிக்கு டெலிகாம் சந்தையில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய சிறந்த டேட்டா பிளான் இதுவாகும்.
ஏனென்றால் டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், ரூ.239 திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறையும். அதாவது இது 5ஜி டேட்டாவை வழங்கவில்லை என்றாலும் கூட அன்லிமிடெட் 4ஜி டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம். முன்னதாக (ஜூலை 2024க்கு முன்பு), ரிலையன்ஸ் ஜியோ இந்தத் திட்டத்தின் கீழ் அதன் பயனர்களுக்கு 5ஜி ஆபரையும் வழங்கியது.
ரூ.239 க்கு மேல் விலை கொண்ட அனைத்து திட்டங்களும் ஜியோ நிறுவனத்திடமிருந்து வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையை பெற்றன. பின்னர் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறைந்தபட்சம் 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவுடன் வரும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் மட்டுமே இப்போது 5ஜி டேட்டா கிடைக்கிறது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.77 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு புதிய டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். சுவாரஸ்யமாக இதில் ஓடிடி (OTT) நன்மையும் தொகுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.77 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.77 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது மற்றும் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ரூ.77 திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை ஆனது பயனர்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.
ஆனால் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவானது 30 நாட்களுக்கு நீடிக்கும். சோனி லைவ் ஓடிடி-யில் உள்ள கன்டென்ட்களை தைபார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் அதை ஜியோடிவி ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம், ஜியோடிவி ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications