எடுத்துக்கோங்க.. ஆளுக்கு ரூ.225 விகிதம் 2 பேருக்கு Jio வழங்கும் பேமிலி பிளான்.. டேட்டா, வாய்ஸ், SMS, OTT உடன்!
ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்து-செய்து மாள முடியவில்லையா? கவலை வேண்டாம். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) ஆரம்ப நிலை ஃபேமிலி போஸ்ட்பெய்டு திட்டம் (Entry-Level Family Postpaid Plan) ஆனது பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களை விட மலிவான விலைக்கு கிடைக்கிறது.
இது ஆளுக்கு ரூ.225 என்கிற விகிதத்தில் 2 ஜியோ சிம் கார்டுகளுடன் ரூ.449 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த திட்டம் - இந்தியா முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு ஃபேமிலி பிளானாகும்; அதாவது இது பல சிம் கார்டுகளுடன் வரும்.

இன்னும் புரியவில்லை என்றால் ஃபேமிலி போஸ்ட்பெய்டு திட்டங்களின் கீழ் பயனர்களுக்கு பல சிம் கார்டுகள் கிடைக்கும். ஆனால் அது எல்லாமே ஒரே பில்லின் கீழ் வரும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய விரும்பாத்தவர்களுக்கு இது வசதியாக இருக்கும். சரி ரூ.449 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 போஸ்ட்பெய்டு திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 75 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இரண்டாம் நிலை சிம்மிற்கு - மாதத்திற்கு 5ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே இரண்டாம் நிலை சிம் ஆனது வாய்ஸ் காலிங் சலுகைகளையும் பெறும்.. அதாவது கால்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படாது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் சிம் தேவைப்பட்டால் - மாதத்திற்கு ரூ.150 வசூலிக்கப்படும்.
மேலும் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட 5ஜி டேட்டாவும் கிடைக்கும். இதோடு ஜியோ அன்லிமிடெட் 2025 சலுகையின் ஒரு பகுதியாக, பயனர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தாவையும் பெறுவார்கள். அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் பல திட்டங்களை போலவே ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டமும் கூட, ஜியோவின் 9வது ஆண்டு விழா சலுகைகளுடன் வருகிறது.
இதில் ஜியோ கோல்ட்டில் 2% கூடுதல் போன்றவை அடங்கும். இதை பெற, 8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்துடன் 50ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும். பின்னர் உள்நாட்டு விமானங்களில் ரூ.2,220 ஈஸ்மைட்ரிப் தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் 15% தள்ளுபடி ஆகிய சலுகைகளும் கிடைக்கும்
மேலும் நெட்மெட்ஸ் (Netmeds) பர்ஸ்ட் மெம்பர்ஷிப் ஆறு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். ஜியோசாவன் ப்ரோவிற்கு (JioSaavn Pro) ஒரு மாத இலவச சந்தா கிடைக்கும். ஜோமோடோ கோல்ட் (Zomato Gold) இல் மூன்று மாத சந்தா என பல சலுகைகள் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.450 க்குள் என்கிற செலவில் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்றே கூறலாம்.
ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இது ரூ.77 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இது இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் ஒரு புதிய டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். சுவாரஸ்யமாக இதில் ஓடிடி (OTT) நன்மையும் தொகுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் ஜியோவின் ரூ.77 திட்டம் ஆனது டேட்டாவை விட ஓடிடி நன்மையை வழங்குவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இது பயனர்களுக்கு மிக குறைந்த அளவிலான டேட்டாவை மட்டுமே வவழங்குகிறது ஆனால் நல்ல வேலிடிட்டி உடன் ஓடிடி நன்மையை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.77 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.77 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது மற்றும் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ரூ.77 திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை ஆனது பயனர்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.
ஆனால் சோனி லைவ் ஓடிடி-க்கான இலவச சந்தாவானது 30 நாட்களுக்கு நீடிக்கும். சோனி லைவ் ஓடிடி-யில் உள்ள கன்டென்ட்களை தைபார்க்க ஆர்வமுள்ள பயனர்கள் அதை ஜியோடிவி ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம், ஜியோடிவி ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








