அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் "ஜியோ": இலவசம் மேல் இலவசம் அறிவிப்பு

|

ஜியோ பைபர் இணைப்பில் டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது. அதோடு, புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களிடம் இதுவரை இணையம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கூடுதல் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ஜியோ பைபருக்கு பாதுகாப்பு தொகையாக ரூ.2500 தவிர வேறு எந்த தொகையும் வசூலிக்கப்படவில்லை. புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் டேட்டாவிற்கும் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

சமீபத்தில் பரவிய தகவல்கள்

சமீபத்தில் பரவிய தகவல்கள்

ஜியோ திட்டங்கள் அறிக்கப்பட்ட போது தெளிவு இல்லாத விஷயங்களில் ஒன்று, பயனர்கள் டிடிஎச் அல்லது கேபிள் டிவி இணைப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா செலவில் வழக்கமான தரவுத் திட்டங்களுடன் தொலைக்காட்சி சேவைகளையும் அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாதாந்திர பில்லிங் துவங்கியதும், நேரடி சேனல்களை பார்ப்பதற்காக செட்-டாப் பாக்ஸ்களை வழங்கப்படும் என தகவல் பரவியது.

கட்டண சேவையை தொடங்கிய ஜியோ

கட்டண சேவையை தொடங்கிய ஜியோ

ஜியோ பைபர் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே தற்போது முன்னோட்ட சலுகைகளை கட்டண திட்டங்களாக மாற்றத் தொடங்கியுள்ளது. ஜியோ பைபர் சேவையில் முன்னதாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்ஆப் பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சேவையில் இணையும் புதிய சந்தாதாரர்களுக்கும் சலுகைகள் செட் ஆப் சில வட்டங்களில் வழங்கப்படுவாத தகவல்கள் வெளியாகிறது.

மிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்மிஸ் பண்ணா நாங்க பொறுப்பில்ல: உடனடியாக இதை செய்யுங்கள்- டுவிட்டர் வலியுறுத்தல்

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் பிளேயர். இதனுடன் HDMI இணைப்பைப் பயன்படுத்தி டிவிகளுடன் இணைக்க முடியும். இது ப்ளூடூத் அடிப்படையிலான ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. செயல்பாடோடு இருக்கும் இன்டெர்நெட் இணைப்புடன் சேனல்களை ஸ்டிரீமிங் செய்யவேண்டும். அதோடு இது ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயக்கப்படுகிறது.

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்

Myjio ஆப் வழியாக ஜியோ பைபர் திட்டத்தை தேர்வு செய்யவும், காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். அல்லது ஜியோ பைபர் பெறுவதற்கு அருகில் உள்ள செட்ஆப் பாக்ஸ் டீலர்களை அணுகலாம். வழிமுறைகள் பின்பற்றி அல்லது ஜியோ தொழில்நுட்ப வல்லுநர் உதவியோடு பைபர் இன்ஸ்டால் செய்யலாம்.

ஹாட்ஸ்டால் மெம்பர்ஷிப்

ஹாட்ஸ்டால் மெம்பர்ஷிப்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பயனர்கள் தங்கள் ஜியோ ஃபைபர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹாட்ஸ்டார், சோனிலைவ், வூட் மற்றும் ஜியோசினிமா சந்தாக்களையும் அணுகலாம். மேலும் ZEE5 மற்றும் SunNXT சந்தாக்களும் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஹாட்ஸ்டாரைப் பொறுத்தவரை, ஜியோவானது ரூ.365 மதிப்புள்ள ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப்பை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் திட்ட பலன்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் திட்ட பலன்கள்:

ரிலையன்ஸ் ஜியோவிடம் தற்போது மொத்தம் ஆறு ஜியோ ஃபைபர் திட்டங்கள் உள்ளன. அவை ரூ.699 முதல் தொடங்கி ரூ.849, ரூ.1,299, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.8,499 வரை நீள்கின்றன. ரூ.699 மதிப்புள்ள அடிப்படை திட்டமானது ஜியோ சினிமா மற்றும் ஜியோசாவ்ன் சந்தாக்களுடன் வருகிறது. ரீசார்ஜ் செய்யும் முதல் மூன்று முறை மட்டுமே ஜியோசினிமா மற்றும் ஜியோசாவ்ன் சந்தாக்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரூ.849 ஜியோ ஃபைபர் திட்டத்திற்கும் பொருந்தும் ஆனால் இதில் ஹாட்ஸ்டார் போன்ற பிரீமியம் ஆப்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டமும் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே.

ஜியோ சேவையின் கூடுதல் அறிவிப்புகள்

ஜியோ சேவையின் கூடுதல் அறிவிப்புகள்

முன்பு போலவே ஜியோ அறிமுக சலுகையாக ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் இலவசம், முதல் மூன்று மாதங்களில் பல்வேறு திட்டங்களை இலவசமாக வழங்குகிறது. செட் ஆப் பாக்ஸ் இலவசம் குறித்த தகவல் சில வட்டங்களில் தெரிய வந்தாலும், தமிழகத்தை பொருத்து முழுமையான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை இலவச அறிவிப்பு உண்மை என்றால் செட்ஆப் பாக்ஸையும் இலவசமாக பெறலாம்.

ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?ஆறுமுக தாத்தா முதல் எருமசாணி வரை: 2019 டாப் 10 யூடியூப் சேனல்கள் என்னென்ன தெரியுமா?

திட்ட அணுகல் முறை

திட்ட அணுகல் முறை

டெலிகாம்டால்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறைந்த பட்சம் ஜியோ ஃபைபர் கோல்ட் பிளான்களுக்கு மேல் பயன்படுத்தும் பயனர்களுக்கு நான்கு பிரீமியம் OTT-களுக்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும். அதாவது ஜியோ ஃபைபர் கோல்ட், டயமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு பிரீமியம் OTT-களுக்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
jio announcing free offering ott app subscriptions including hotstar and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X