Home
News

ஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே!

ஜியோ நிறுவனத்தின் Jio Oppo Monsoon Offer என்னும் புதிய அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் ஜியோஃபை ரூட்டருக்கான சலுகை அறிவிப்பு வெளிவந்துள்ளது.

By Abu Bakker Fakkirmohamed

கணிப்பொறி இணைப்புகளுக்கு இடையே இணையத் தரவுகளை முன்னெடுத்துச் செல்லும் கம்பியில்லா இணைப்புக் கருவியான ஜியோஃபை (JioFi) 4G ரூட்டரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக ஜியோ நிறுவனம், செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறும் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இச்சலுகையின்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்திலிருந்து 500 ரூபாயைத் திரும்பப் பெற முடியும். இதன் காரணமாக ஜியோஃபை (JioFi) 4G ரூட்டரின் விலை 499 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜியோஃபை 4G ரூட்டரின் விலையை 1,999 ரூபாயிலிருந்து 999 ரூபாயாகக் குறைத்திருந்தது ஜியோ நிறுவனம். இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் புதியதாக ஜியோஃபை ரூட்டரை வாங்க வேண்டும். ஏற்கனவே வாங்கிய ரூட்டருக்கு இந்தச் சலுகை வழங்கப்படாது. இந்தச் சலுகை ஜீலை 3 ஆம் தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. சலுகை முடிவு பெறும் கடைசித் தேதி அறிவிக்கப்படவில்லை. ஜியோஃபை (JioFi) ரூட்டரை ஜியோ ஸ்டோர்கள் மற்றும் மின் வணிகத் தளங்களான, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் மூலமாகவும் வாங்கலாம்.

ஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே!

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் வாடிக்கையாளர்கள், ஜியோஃபை ரூட்டர் மற்றும் அதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற போஸ்ட்பெய்டு சிம் கார்டும் வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 199 ரூபாய் மதிப்புள்ள போஸ்ட் பெய்டு திட்டத்தில் இணைந்து 12 மாதங்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் 500 ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் தொகை பணமாக வழங்கப்படாது, அதற்குப் பதிலாக அடுத்தடுத்த மாதங்களில் வரும் கட்டணத் தொகைகளில் கழித்துக் கொள்ளப்படும். ஜியோ போஸ்ட்பெய்டு 199 ரூபாய் திட்டத்தில், 25 GB டேட்டா, இலவச அழைப்புகள், கணக்கற்ற SMS பகிர்வுகள் மற்றும் ஜியோ செயலிகளுக்கான பிரிமியம் சந்தா போன்ற வசதிகள் உள்ளன.

ஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே!

ஜியோ நிறுவனத்தின் Jio Oppo Monsoon Offer என்னும் புதிய அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் ஜியோஃபை ரூட்டருக்கான சலுகை அறிவிப்பு வெளிவந்துள்ளது. Jio Oppo Monsoon Offer-ன்படி 4,900 ரூபாய் வரையிலான சலுகைகளைப் பெறலாம். இந்தச் சலுகை செப்டம்பர் 25 வரை செயல்பாட்டில் இருக்கும். 50 ரூபாய்க்கான கூப்பன்கள் 1800 ரூபாய் வரை வழங்கப்படும்.

MakeMyTrip வழங்கும் 1,300 ரூபாய்க்கான சலுகைக் கூப்பன்கள், ஜியோ மணி செயலியின் (Jio Money) வழியாக 36 மாதங்களுக்கு 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது 1,800 ரூபாய் திரும்பப் பெறும் வகையிலான சலுகை என 4,900 ரூபாய் வரையிலான சலுகைத் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோஃபை ரூட்டர் விலை ரூ.499/- மட்டுமே!

இதுமட்டும் அல்லாமல், ஜீன் மாதம் முதல் தினந்தோறும் கூடுதலாக 1.5 GB டேட்டா பயன்பாட்டு வசதியினை தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஜியோ வழங்கி வருகிறது. ரூபாய் 149 முதல் 799 ரூபாய் வரையுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்தத் திட்டங்களில் எதில் இணைந்தாலும் தினந்தோறும் கூடுதலாக 1.5 GB டேட்டா பயன்பாட்டுச் சலுகை வசதியைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Jio Announces New Cashback Offer Lowers JioFi Effective Price to Rs 499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X