ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு: ஜியோ Newyear பிளான்: 1 போன் ஃப்ரீ, 2020 முழுவதும் கால், நெட் இலவசம்

|

புத்தாண்டை வரவேற்கும் விதமாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆஃபர்கள் அறிவிப்பது வழக்கம். இதில் ஜியோ எப்போதுமே தனித்து செயல்படும். அதன்படி 2020 ஆம் ஆண்டை முன்னிட்டு 2020 ரூபாய்க்கு திட்டத்தை அறிமுகம் செய்து ஜியோ அசத்தியுள்ளது.

40 சதவீத விலை உயர்வு

40 சதவீத விலை உயர்வு

அண்மையில் டெலிகாம் நிறுவனங்கள் முன்பு வழங்கி வந்த திட்டங்களின் விலையை 40 சதவீதத்திற்கு உயர்த்தியது.அதனை தொடர்ந்து ஜியோ - ஜியோ வாய்ஸ் கால் அழைப்புகள் மட்டும் இலவசம் என்றும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ அறிவித்திருந்தது.

300 சதவீதம் அதிக நன்மை

300 சதவீதம் அதிக நன்மை

ஜியோ நிறுவனம் தனது ஜியோ பயனர்களுக்காக புதிய ஆல்-இன்-ஒன் திட்டம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு முன்பைவிட 300 சதவீதம் அதிக நன்மை கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

2020 நமதே., காலரை தூக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3, ககன்யான் என பல திட்டங்கள்2020 நமதே., காலரை தூக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3, ககன்யான் என பல திட்டங்கள்

சமீபத்திய தகவல்

சமீபத்திய தகவல்

தற்பொழுது கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் முன்பு வழங்கப்பட்டுவந்த பழைய சலுகைகளுக்கு இப்பொழுதும் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இதில் ஒரு சூட்சமும் உள்ளது. இந்த சூட்சமத்தை சரியாக வழிமுறைப்படி கையாண்டால் பழைய சலுகையுடன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

முந்தைய சலுகைகள் மீண்டும் பெற

முந்தைய சலுகைகள் மீண்டும் பெற

பழைய ரீசார்ஜ் சலுகையில் இருக்கும் எவ்வித சலுகையையும் அந்த வாடிக்கையாளர் பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே, முன்பு வழங்கப்படச் சலுகைகளுடன் அந்த வாடிக்கையாளர் தற்பொழுது ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஜியோவின் முந்தைய சலுகைகளை அனுபவிக்காத பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை இப்பொழுது வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு ரீசார்ஜ் திட்டம்

2020 ஆம் ஆண்டு ரீசார்ஜ் திட்டம்

இந்த நிலையில் அடுத்து வரும் 2020 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ரூ.2020-க்கு ஜியோ திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2020 செலுத்தி 12 மாத சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் வருடம் முழுவதும் இலவச கால், தினசரி 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்ட அனைத்தும் 365 நாட்களுக்கும் வழங்குகிறது. அதோடு வருடம் முழுவதும் இலவச மெசேஜ்கள் மற்றும் ஜியோ ஆப் சேவை.

அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் அடிதூள்.!- போதும்., போதும்னு சொல்ல வைக்கும் "ஜியோ": இலவசம் மேல் இலவசம் அறிவிப்பு

1 போன் இலவசம், 2020 திட்டம்

1 போன் இலவசம், 2020 திட்டம்

அதேபோல் அதே ரூ.2020-க்கு மற்றொரு திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. அது 2020 ரூபாய் செலுத்தி ஜியோ போனை இலவசமாக வாங்கலாம். அதில் வருடம் முழுவதும் இலவச அழைப்பு, தினசரி 0.5 ஜிபி டேட்டா சேவை மற்றும் இலவச மெசேஜ், ஜியோ ஆப்கள் வசதிகள் உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio announces 2020 happy new year offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X