மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.! எந்தெந்த திட்டங்களில்? எப்படி பெறுவது?

|

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் மீண்டும் மீண்டும் மாற்றங்களைச் செய்து வருகிறது. அதேசமயம் குறிப்பிட்ட திட்டங்களில் சில சலுகைகளையும் வழங்கி வருகிறது. மக்கள் அதிக செலவு செய்யத் தயாராக இருக்கும் பண்டிகைக் காலத்தின் பின்னணியில் சமீபத்திய மாற்றங்கள் வருகின்றன.

தற்போது ஜியோ நிறுவனம் மூன்று

அதன்படி தற்போது ஜியோ நிறுவனம் மூன்று திட்டங்களில் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை கண்டிப்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இப்போது ரூ.249, ரூ.555 மற்றும் ரூ.599 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் 20 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே இப்போது

அதேபோல் இந்த கேஷ்பேக் சலுகை எப்படி பெறுவது என்றால், ஜியோ நிறுவனத்தின் ஆப் மற்றும் இணையதளத்தில் தங்கள்
எண்ணை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். குறிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு மட்டுமே இப்போது கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது, இதை தவிற வேறு எந்த திட்டங்களிலும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படவில்லை. மேலும் இப்போது ரூ.249, ரூ.555 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் "ப்ளூடூத் செருப்பு"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி100 எஸ்எம்எஸ், ஜியோ கிளவுட்,ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட ஜியோ ஆப் வசதிகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் சியோமி CIVI ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் சியோமி CIVI ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட ஜியோ ஆப் வசதிகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

Flipkart வெளியிட்ட அசத்தலான மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் சாதனம்.. ரூ. 6,299 என்ற மலிவு விலையில் எப்போ வாங்கலாம்Flipkart வெளியிட்ட அசத்தலான மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் சாதனம்.. ரூ. 6,299 என்ற மலிவு விலையில் எப்போ வாங்கலாம்

ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட ஜியோ ஆப் வசதிகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி, 12ஜிபி ரேம் உடன் ஐக்யூ இசட்5 5ஜி: குறைந்த விலை ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இதோ!5000 எம்ஏஎச் பேட்டரி, 12ஜிபி ரேம் உடன் ஐக்யூ இசட்5 5ஜி: குறைந்த விலை ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இதோ!

சமீபத்தில் ஜியோபோன்

அதேபோல் சமீபத்தில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம்.அதன்படி ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 366 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு 28 நாட்கள் என்கிற சுழற்சிக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன் மொத்தம் 12 சுழற்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால்இந்த திட்டத்தில் மாதம் 2ஜிபி அளவிலான டேட்டா நன்மை உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆகக்குறையும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில்கிடைக்கும். இதுதவிர JioTV, JioCinema, JioNews Jiosecurity மற்றும் JioCloud போன்ற ஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த அசத்தலான ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். ஜியோபோன்வாடிக்கையாளர்களுக்கு தற்போது இந்த புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் Jio.com மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio announces 20% cashback offer on three plans! How to get?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X