கதை முடிந்தது.. இனிமே Starlink இன்டர்நெட்.. எலான் மஸ்க், அம்பானி டீல்.. மலிவு விலைக்கு ஸ்கெட்ச்.. என்ன மாறும்?
இந்தியாவின் டெலிகாம் தலையெழுத்தே மாறும்படியான ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms Limited) நிறுவனம் செய்து முடித்துள்ளது. ஸ்டார்லிங் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகளை (Starlink Broadband Internet Services) வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பார்தி ஏர்டெல் செய்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, அதே சூட்டில் இந்த முடிவை இறக்கிய இருக்கிறது. ஸ்டார்லிங் சாட்டிலைட் சேவைகளால் இந்த டெலிகாம் மார்கெட்டில் என்னென்ன மாறப்போகிறது? இதனால் திட்டங்களின் விலையில் மாற்றம் இருக்குமா?
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் முக்கால்வாசி டெலிகாம் கஸ்டமர்களை கொண்டிருக்கின்றன. இதனால், இந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. இருப்பினும், இந்த நிறுவனங்களைவிட பெரிய முதலையாக இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார்லிங் மூலம் போட்டியில் முந்த முடியும்.

ஏனென்றால், நேரடியாக சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்க முடிவதால், இதற்கு சாத்தியம் இருக்கிறது. பல வருடங்களாக எலான் மஸ்க் இந்தியாவின் டெலிகாம் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறைகளில் களமிறங்க காத்திருந்தார். இதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு டெஸ்லா கார்கள் இறக்குமதி மூலம் ஆட்டோமோட்டிவ் துறையில் கால் பாதிக்க தயாராகிவிட்டார்.
இப்போது, டெலிகாம் துறையிலும் இரு துருவங்களின் ஒப்பந்தத்தை பெற்று தனது ஆசைக்கு தீனிப் போட்டுள்ளார். பார்தி ஏர்டெல் நிறுவனமானது, ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாக அறிவித்த அடுத்த நாளில் ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பை கொடுத்துள்ளது.
அதில், இந்தியாவில் உள்ள ஜியோ கஸ்டமர்களுக்கு ஸ்டார்லிங்கின் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தமானது, இந்தியாவில் ஸ்டார்லிங் சேவைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை பெறுவதற்கு உட்பட்டதாகும். ஜியோ வழங்கிவரும் சலுகைகளை ஸ்டார்லிங்க் மூலம் எவ்வாறு விரிவுபடுத்த முடியும்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வழங்கும் சலுகைகளை ஜியோ எவ்வாறு கஸ்டமர்கள் மற்றும் வணிகர்களுக்கு உதவும்படி கொடுக்க முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட இருக்கிறது. ஆகவே, ஜியோ நிறுவனமானது, அதனுடைய ஆன்லைன் ஸ்டோர்கள், ரீடெயில் அவுட்லெட்கள் மூலம் ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்க இருக்கிறது. சாட்டிலைட்கள் மூலம் ஸ்டார்லிங்க் சேவைகள் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய மொபைல் ஆபரேட்டரான ஜியோவும் பூமியின் வளிமண்ட சுற்றிப்பாதையில் சாட்டிலைட்களை இயக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனமும் கைகோர்த்து இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கப்படுவதை உறுதி முடியும். இதில் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கும் சேவைகள் கிடைக்க இருக்கிறது.
குறிப்பாக, ஜியோஏர்ஃபைபர் (JioAirFiber) மற்றும் ஜியோஃபைபர் (JioFiber) சேவைகளில் அதிகவேகம் மற்றும் மலிவு விலை ஆகியவற்றை உறுதி செய்யும்படி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பிராட்பேண்ட் சேவைகள் மட்டுமே இப்போதைக்கு இந்த ஜியோ மற்றும் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இது நேரடியாக மொபைல் சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது இப்போதைக்கு உறுதியாகும். இந்த ஸ்டார்லிங் சாட்டிலைட்கள் மூலம் மொபைலுக்கும் நேரடியாக சேவைகளை வழங்க முடியும். ஆனால், அதற்கான அப்கிரேட்கள் மொபைலில் தேவைப்படுகிறது. ஆகவே, வரும் காலங்களில் அதை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு பிராட்பேண்ட் சேவைகள் சாட்டிலைட்கள் மூலம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








