ஏப்.1-க்கு அப்புறம்.. போன் வாங்கிய கஸ்டமர்கள்.. மீண்டும் இலவசம்.. டேட்டா, வாய்ஸ் எல்லாம்.. Jio புதிய திட்டம்!
ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் 4ஜி சேவைக்கு மாற்ற இலவச டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுத்தது போல, இப்போது ஜியோபாரத் 4ஜி போன் (JioBharat 4G Phone) கஸ்டமர்களுக்கு இலவச சலுகையை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். விவரம் இதோ.
ஜியோ (Jio), ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்களை 5ஜி சேவைக்கு மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை இலவசமாக வழங்க தொடங்கிவிட்டன. ஜூன் மாதத்துக்கு பிறகு 5ஜி திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று டெலிகாம் மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஏற்கனவே இருக்கும் 4ஜி கஸ்டமர்களை தக்க வைக்கும் பணியில் ஜியோ நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. அதிலும், ஜியோபாரத் 4ஜி போன்களை பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை கொடுத்து வருகிறது. முன்னதாக ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.
இப்போது, அந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 மாத இலவச சேவையை அறிவித்துள்ளது. ஐபிஎல் 2024 போட்டிகளை முன்னிட்டு இந்த சலுகையை கொடுப்பதாக தெரிவிக்கிறது. ஆனால், புதிய ஜியோபோன் கஸ்டமர்களை கவரும் வகையிலேயே இந்த 2 மாத இலவச சலுகை (2 Months Free Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இந்த இலவச சலுகையை பெறுவதற்கு ஜியோபாரத் 4ஜி போன் வைத்திருந்தால் மட்டும் போதாது, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு வாங்கப்பட்ட ஜியோபாரத் போனை வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். இதன் மூலம் ஜியோபாரத் 4ஜி போனின் விற்பனையை அதிகரிக்கவும், 4ஜி சேவையை தக்கவைக்கவும் ஜியோ முயற்சித்துள்ளது.

இருப்பினும், 2 மாதங்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைப்பது, புதிய ஜியோபோன் 4ஜி கஸ்டமர்களுக்கு நல்ல சலுகைகள் கொண்டதாகவே தெரிகிறது. முதலில் ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம். ஏனென்றால், அதே சலுகைகளே 2 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கப்போகிறது.
ஜியோபாரத் ரூ 234 திட்ட விவரங்கள் (JioBharat Rs 234 Plan Details): இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 0.5 ஜிபி வீதம் 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் இந்த ஜியோபாரத் போன் திட்டத்திலும் கிடைக்கிறது. இதுபோக ஜியோசாவன் (JioSaavn) மற்றும் ஜியோசினிமா (JioCinema) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோசினிமாவில் ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக பார்த்து கொள்ளலாம்.
இதே சலுகைகள் 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு வாங்கப்பட்ட ஜியோபாரத் 4ஜி போனில் ரூ 234 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் போதும், இலவச சலுகைகளை பெற்று கொள்ளலாம். திட்டத்தை பார்த்துவிட்டோம், ஜியோபாரத் 4ஜி போன் எப்படி என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.
ஜியோபாரத் போனில் வி2 சீரிஸ், கே1 கார்பன் மற்றும் பி1 சீரிஸ் என்று மூன்று மாடல்கள் கிடைக்கின்றன. இருப்பினும், மிகவும் மலிவாக வெறும் ரூ.999 விலைக்கு விற்பனையாகும் ஜியோபாரத் வி2 மாடலை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த போனில் 1.77 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 128 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
1000mAh பேட்டரி வருகிறது. டிஜிட்டல் ரியர் கேமரா கொண்டிருக்கிறது. ஜியோசினிமா, ஜியோசாவன் மட்டுமல்லாமல், ஜியோபே (JioPay) ஆப் பயன்படுத்தலாம். 4ஜி டேட்டா சேவை கிடைப்பதால், பீச்சர் போனினும் அதிவேக டேட்டா அனுபவத்தை பெற்று கொள்ளலாம். ரூ.999 போன், ரூ.234 ரீசார்ஜ் அவ்வளவுதான் நல்ல சலுகைகளை பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








