Home
News

புதிய Jio ரீசார்ஜ்.. ரூ.350 க்கு ரூ.2600 நன்மைகள்.. அள்ளி கொடுக்கும் அம்பானி.. 5ஜி, OTT, டேட்டா, வாய்ஸ், SMS!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது அன்லிமிடெட் 5ஜி ப்ரீபெய்ட் திட்டம் (Unlimited 5G Prepaid Plan) ஒன்றை "ஜியோ ஸ்டார்டர் பேக்" (Jio Starter Pack) என்று விளம்பரப்படுத்த தொடங்கி உள்ளது. அது ரூ.349 ரீசார்ஜ் திட்டமாகும் தற்போது இது ஜியோ ஸ்டார்டர் பேக் ரூ.349 என்று அழைக்கப்படுகிறது.

ஜியோ ஸ்டார்டர் பேக் (Jio Rs 349 Starter Pack) என சந்தைப்படுத்தப்படும் இந்த திட்டம் - 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி கொண்ட என்ட்ரி லெவல் அன்லிமிடெட் 5ஜி திட்டம் (Entry-level 28-day Unlimited 5G plan) ஆகும். இது ஜியோ சேவையின் கீழ் இணைந்த புதிய பயனர்களுக்கான திட்டமாகும் மற்றும் இது ரூ.2,600 மதிப்புள்ள நன்மைகளுடன் வருகிறது.

புதிய Jio ரீசார்ஜ்.. ரூ.350 க்கு ரூ.2600 நன்மைகள்!

ஜியோ ஸ்டார்டர் பேக் ரூ.349 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் (Jio Started Pack Rs 349 Benefits) கிடைக்கும்? ரூ.349 மதிப்புள்ள இந்த ஜியோ ப்ரீபெய்டு திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது

டெய்லி 2 ஜிபி ஹைஸ்பீட் டேட்டா பயன்பாட்டிற்குப் பிறகு, 64 கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. மேலும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் கிடைக்கும் (இந்த நன்மையை பெற உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும்; நீங்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் இருக்க வேண்டும்).

மேலும் இந்த திட்டத்தின் ஜியோ அன்லிமிடெட் சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தாவும் கிடைக்கும். கூடுதலாக இலவச 50ஜிபி ஏஐ கிளவுட் ஸ்டோரேஜையும் பெறுவீர்கள். ஜியோவின் கூற்றுப்படி, ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு முறை மற்றும் வரையறுக்கப்பட்ட கால சலுகையாக இருக்கும்.

ஜியோ சேவையின் கீழ் மாதாந்திர திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் 2வது மற்றும் 3வது மாத ஜியோ ஹாட்ஸ்டார் சலுகைகளை பெற, தங்கள் திட்டங்கள் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் இன்னொரு ஆக்டிவ் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். தவறினால் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்காமல் போய்விடும்.

ரூ.349 ஸ்டார்டர் பிளானின் கீழ் கிடைக்கும் ரூ.2,600 மதிப்புள்ள சலுகைகள்: நீங்கள் ஒரு புதிய ஜியோ சிம் கார்ட்டை தேர்வு செய்தால், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ஸ்டார்டர் பேக்கின் கீழ் உங்களுக்கு ரூ.2,600 மதிப்புள்ள ஜியோ அன்லிமிடெட் சலுகையின் பலன்கள் கிடைக்கும். அதெப்படி?

- ரூ.349 மதிப்புள்ள இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன் ஜியோ ட்ரூ 5ஜி ஆபரை (Jio True 5G Offer) வழங்குகிறது
- மேலும் ரூ.1,111 மதிப்புள்ள 50 நாட்களுக்கு இலவச வீட்டு வைஃபையுடன் ஜியோ ஹோம் (ஏர்ஃபைபர் அல்லது ஃபைபர்) சேவையையும் (Jio Home AirFiber or Fiber with free home Wi-Fi) வழங்குகிறது

- ரூ.299 மதிப்புள்ள 90 நாட்களுக்கு இலவச கிரிக்கெட் சேவையுடன் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகிறது
- ரூ.900 மதிப்புள்ள 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் உடன் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சேவையை வழங்குகிறது. மேற்கண்ட இலவச சலுகைகள் அனைத்தும் ஜியோவின் மதிப்பீடுகளின்படி ரூ.2,659 (2,600க்கு மேல்) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Announced New Plan Rs 349 Starter Pack for New SIM Users Offers Benefits Worth Rs 2600
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X