மறுபடியும் இலவச அழைப்புகளை வழங்கி தெறிக்கவிட்ட ஜியோ.! நாளை முதல் ஆரம்பம்.! ஜியோ அதிரடி
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியை இந்த புத்தாண்டில் அறிவித்துள்ளது.

அதாவது மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துளளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜியோவிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு செய்யும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1 முதல் இலவசமாக இருக்கும். எனவே இந்த அறிவிப்பானது நாளை ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த காலங்களில பிற நெட்வொர்க்குகளுக்கான அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் வசூல் செய்தது. ஆனால் தனது சொந்த நெட்வொர்க்கில் உள்ள அழைப்புளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இதேபோல் நாளை முதல் பிற நெட்வொர்க்குகளுக்கான அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, Bill and Keep Regime-ஐ 2021 ஜனவரி 1 முதல் நாட்டில் செயல்படுத்தி, அதன் மூலம் அனைத்து உள்நாட்டு குரல் அழைப்புகளுக்கும் இன்டர்கனெக்ட் யூசேஜ் கட்டணங்களை (ஐ.யூ.சி) முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த செப்டம்பர் 2019-இல் டிராய் பில் & கீப் ரெஜிமை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை 2020 ஜனவரி 1-க்கு அப்பால் நீட்டித்தபோது, ஜியோ தனது பயனர்களுக்கு ஆஃப்நெட் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

எனவே அவ்வாறு செய்யும்போது, டிராய் ஐ.யூ.சி கட்டணங்களை ரத்து செய்யும் காலம் வரை மட்டுமே 6 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிப்பது தொடரும் என்றும் ஜியோ தனது பயனர்களுக்கு உறுதியளித்தது. தற்சமயம் ஜியோ நிறுவனம் அதன் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications