மன்னிப்பு.. கூடவே 2 நாள் இலவச அன்லிமிடெட் பிளான்! வேலிடிட்டி முடிஞ்சதும் தானா ஆக்டிவ் ஆகிடும்.. Jio அறிவிப்பு!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆனது 2 நாட்களுக்கான இலவச அன்லிமிடெட் திட்டத்தை (Complimentary 2-day Unlimited Plan) அறிவித்து உள்ளது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
டெலிகாம்டால்க்கின் (TelecomTalk) புதிய அறிக்கை, சமீபத்தில் ஜியோ சேவையின் அவுட்கோயிங் சேவைகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு (தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு) 2 நாட்களுக்கான இலவச அன்லிமிடெட் திட்டம் கிடைக்கும் என்று, ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சமீபத்தில் அனுப்பிய ஒரு தகவலில் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் அனுப்பப்பட்ட மெசேஜ்களை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் குறிப்பிட்ட இலவச 2-நாள் திட்டம் குறித்த விவரங்களை காட்டும மைஜியோ ஆப் (MyJio App) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) ஸ்கிரீன்ஷாட்களை பார்க்க முடிகிறது.
கஸ்டமர்-ஃபர்ஸ்ட் அப்ரோச்சின் () ஒரு பகுதியாக, இரண்டு நாட்களுக்கான ஜியோவின் வரம்பற்ற இலவச திட்டம் ஆனது பாதிக்கப்பட்ட பயனரின் ஜியோ நம்பரில் தற்போது ஆக்டிவ் ஆக உள்ள மெயின் ரீசார்ஜ் காலாவதியான உடன், அவர்களின் ஜியோ நம்பரில் தானாகவே செயல்படுத்தப்படும் என்றும் ஜியோ கூறியுள்ளது!
சிறந்த சர்வீஸ் எக்ஸ்பீரியன்ஸை வழங்குவது தான் எங்களுடைய முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய இடையூறுகளை ஒப்புக்கொண்ட ஜியோ நிறுவனம், ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், நெட்வொர்க் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் உறுதியளித்துள்ளது.
வாடிக்கையாளர் அனுபவம் அதன் செயல்பாடுகளுக்கு மையமாக இருப்பதை ஜியோ மீண்டும் உறுதிப்படுத்தியது. அதாவது ஜியோ நிறுவனம் இப்படி செய்வது முதல் முறை அல்ல. சேவை செயலிழப்புக்கு பதிலளிக்கும் விதமாக ஜியோ நிறுவனம் இரண்டு நாள் இலவச சேவையை வழங்குவது முதல் முறை அல்ல, இந்நிறுவனம் கடந்த காலங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை செய்துள்ளது.
டெலிகாம் துறை தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆனது அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரூ.189 க்கு புதிய பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 21 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இதன்கீழ் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1ஜிபி மொபைல் டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
மேலும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது இந்தியா முழுவதும் 94,500 க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை நிறுவியுள்ளதையும் அமைச்சர் சிந்தியா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த 94,500 டவர்களில், 80-85% க்கும் மேற்பட்ட டவர்கள் இப்போது இயக்கப்பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மைல்கல்லை கடந்த ஜூன் 2025 க்குள் எட்டியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அதை செய்ய முடியவில்லை.
இருப்பினும் இதுவொரு நல்ல செய்தி தான். ஏனென்றால் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் ஆனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இதை மிகவும் எளிதாக 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்கிரேட் செய்ய முடியும். ஆக பிஎஸ்என்எல்-ன் 1 லட்சம் 4ஜி டவர்கள் என்பது பிஎஸ்என்எல்-ன் 1 லட்சம் 5ஜி டவர்களுக்கு சமமாகும்.
மேலும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தொடர்ந்து மைசூரில் (Mysore) தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கூடவே மைசூரில் உள்ள வோடாபோன் ஐடியா பயனர்கள் ரூ.299 முதல் தொடங்கும் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் விஐ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரை பெறுவார்கள். பெயர் குறிப்பிடுவது போலவே இதன் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டாவை அணுக முடியும். இருப்பினும், இது அறிமுக சலுகையின் ஒரு பகுதி என்பதையும் விஐ தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








