ஏரி உடைஞ்சா மீன் ஏரியாக்கு வந்து தான் ஆகனும்! ரீசார்ஜ் பிளானில் கூடுதல் நன்மைகள் அறிவித்த Jio.!
புத்தாண்டை கொண்டாடும் வகையில் Reliance Jio குறிப்பிட்ட ரீசார்ஜ் பிளானில் கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது. நீங்கள் புதிய பிளானில் ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். கீழே வழங்கப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

புத்தாண்டு 2023
புத்தாண்டு 2023ஐ முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ ரூ.2023 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமின்றி நிறுவனம் சில ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. ரூ.2023 ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் குறித்த விவரங்களையும், கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் திட்டத்தின் விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.

ரூ.2023 ரீசார்ஜ் திட்டம்
2022 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ புதிய ஹேப்பி நியூ இயர் 2023 திட்டத்தை ரூ.2023 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு திட்டத்தை அறிமுகம் செய்வது ஜியோ வழக்கம். அதன்படி தான் ஜியோ இந்தாண்டும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

ஏராளமான டேட்டா சலுகைகள்
ரிலையன்ஸ் ஜியோ புதிய ஹேப்பி நியூ இயர் 2023 திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய ஆண்டு 2023ஐ குறிக்கும் விதமாக இந்த திட்டத்தின் விலை ரூ.2023 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹேப்பி நியூ இயர் திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஏராளமான டேட்டா சலுகைகளை வழங்குகிறது.

தினசரி 2.5 ஜிபி டேட்டா
ரூ.2023 ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது 252 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஏறத்தாழ 9 மாதங்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை இந்த திட்டம் வழங்குகிறது. அதேபோல் வேலிடிட்டி முடியும் காலம் வரை தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக டேட்டா முடியும் காலம் வரை 630 ஜிபி டேட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது.
ரூ.2023 திட்டத்தில் ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தா அணுகல் கிடைக்கிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. புத்தாண்டு சலுகையின் ஒரு பகுதியாக, புதிய சந்தாதாரர்களுக்கு இலவச பிரைம் மெம்பர்ஷிப் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

கூடுதல் நன்மைகளுடன் ரீசார்ஜ் திட்டங்கள்
அதேபோல் ஜியோ மற்றொரு வருடாந்திர திட்டித்திலும் கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது. அது ரூ.2999 திட்டமாகும். அதாவது ரூ.2999 திட்டத்தில் நிறுவனம் சில கூடுதல் பலன்களை இணைத்திருக்கிறது. ரூ.2999 திட்டத்தில் 75 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் முந்தைய வேலிடிட்டி நாட்களை விட 23 நாட்கள் அதிகமாக செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

912.5ஜிபி டேட்டா
ரூ.2999 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டமானது மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2.5 ஜிபி டேட்டா என்ற வீதம் இந்த சலுகை கிடைக்கிறது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

730 ஜிபி டேட்டா
ஜியோவின் பிற வருடாந்திர திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.2874 திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் இணையம் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸின் பாராட்டுக்கான சந்தா அணுகலும் கிடைக்கிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.

வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்
அதேபோல் ரூ.2545 திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 504 ஜிபி டேட்டா தினசரி 1.5ஜிபி டேட்டா என்ற வீதம் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸிற்கான பாராட்டு சந்தா நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டமானது 336 நாட்களுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications