பயனர்கள் குஷி: பணம் வாங்காமல் ஜியோ வழங்கும் 5ஜிபி டேட்டா- அவசர தேவைக்கு யூஸ் பண்ணுங்க!
ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசர தரவு வழங்குகிறது. ஜியோவின் நடவடிக்கை ரீசார்ஜ் செய்ய பணம் இல்லாமலும், சமயத்தில் வேறு வழியின்றியும் போராடும் நபர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் அவசர தரவாக ஒரு பயனருக்கு அதிகபட்சம் 5 ஜிபி தரவு வழங்க இருக்கிறது. இந்த தரவானது முற்றிலும் இலவசம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் இது ஒரு கடன் போன்ற திட்டமாகும்.

கடன் முறையில் அவசர தரவு திட்டம்
பயனர்கள் அனைத்து நேரத்திலும் ரீசார்ஜ் செய்ய முடியாது காரணம் பல சூழலில் சிக்கலை சந்திக்கலாம். அவர்களுக்கான அறிவிப்பாக இது இருக்கும். மேலும் கொரோனா ஊரடங்கு காரணத்தால் வங்கி கணக்கில் தொகை இல்லாமல் கையில் பணத்துடன் இருப்பவர்கள் கடை தேடி அழைய முடியாது. இதையடுத்து நிறுவனம் 5ஜிபி தரவை வழங்குகிறது. இந்த 5ஜிபி தரவும் மொத்தமாக இல்லாமல் 1ஜிபி டேட்டா பேக்கிற்கு நிறுவனத்தின் டேட்டா கூப்பனை ரூ.11 என கடன் வீதத்தில் பெற்றுக் கொள்ளலாம், பின் கடன் தொகையை செலுத்த வேண்டும்.

அதிகபட்சமாக 5 ஜிபி தரவை கடன் வாங்கலாம்
ஒவ்வொரு பயனரும் நிறுவனத்திடம் இருந்து அதிகபட்சமாக 5 ஜிபி தரவை கடன் வாங்கலாம். இதன்மூலம் அதிகபட்சமாக ரூ.55 என்ற தொகை வீதம் கடன் முறையில் திட்டங்களை வழங்குகிறது. அதேபோல் ஜியோவின் புதிய அவசர தரவு சலுகை சில விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.

காலாவதி வரை மட்டுமே செல்லுபடியாகும்
அவசர தரவை பெறுவதற்கு நபர் செயலியில் உள்ள திட்டங்களில் இருக்க வேண்டும். நிறுவனத்தின் கடன் தரவு அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி வரை மட்டுமே செல்லுபடியாகும். செல்லபடியாகும் காலம் முடிந்ததும் அவசர தரவு காலாவதியாகிறது.

1ஜிபி தரவு விலை ரூ.11
1ஜிபி தரவு விலை ரூ.11-க்கு என தனிப்பட்ட திட்டத்தில் கிடைப்பது பலருக்கும் வசதியாக இருக்கிறது என்றே கூறப்படுகிறது. மேலும் ஜியோ அறிவித்த கடன் திட்டம் அவசர காலத்தில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஜியோ தொடர்ந்து பல்வேறு திட்டங்களை ஏணைய சலுகைகளோடு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்திய சந்தையில் கிடைக்கும் என நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிக மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் இந்த சாதனத்தில் ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா வசதியும் உள்ளது எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

1ஜி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி
ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, 1ஜி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு சிறப்பு பதிப்பான கோ எடிஷனில் தான் ஜியோபோன் நெக்ஸ்ட் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது


Click it and Unblock the Notifications