Home
News

அள்ளி கொடுகும் அம்பானி.. புதுசா அறிமுகமான 2GB ஜியோ பிளானில்.. FREE ஆக 18GB டேட்டா சேர்ப்பு! என்ன ரீசார்ஜ்?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, சமீபத்தில் அதன் ஜியோடிவி பிரீமியம் (JioTV Premium) தொகுப்பின்கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த தொகுப்பின் கீழ் ரூ.148, ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ.4498-க்கு 4 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

அதிலொரு திட்டத்தின் கீழ் தான் 18ஜிபி அளவிலான போனஸ் டேட்டா (18GB Bonus Data) அணுக கிடைக்கிறது. அதென்ன திட்டம்? அதன்கீழ் கிடைக்கும் 18ஜிபி போனஸ் டேட்டாவை பெறுவது எப்படி? போனஸ் டேட்டா தவிர்த்து வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்ன வேலிடிட்டி? இதோ விவரங்கள்:

புதுசா அறிமுகமான 2GB ஜியோ பிளானில் FREE ஆக 18GB டேட்டா சேர்ப்பு!

அதென்ன திட்டம்? போனஸ் டேட்டாவை பெறுவது எப்படி? ஜியோடிவி பிரீமியம் தொகுப்பின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.1198 திட்டத்தில் தான் 18ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கிறது. இந்த போனஸ் டேட்டாவானது மூன்று 6ஜிபி டேட்டா வவுச்சர்களின் வடிவத்தில் வழங்கப்படும். இந்த 3 வவுச்சர்களும் மைஜியோ ஆப்பில் உள்ள ரிஜிஸ்டர் செய்யப்பட்ட யூஸர் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

ரூ.1198 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1198 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை முன்னதாக இது தினமும் 2ஜிபி டேட்டா என்கிற விகிததால் மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்கியது.

புதுசா அறிமுகமான 2GB ஜியோ பிளானில் FREE ஆக 18GB டேட்டா சேர்ப்பு!

தற்போது இந்த திட்டத்தில் 18ஜிபி போனஸ் டேட்டாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1198 ஜியோடிவி பிரீமியம் திட்டத்தின் மொத்த டேட்டா நன்மையானது 186ஜிபி ஆக உயர்ந்துள்ளது. ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் 14 ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்கள் அணுக கிடைக்கும்.

என்னென்ன ஓடிடி தளங்கள் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும்? ரூ.1198-ன் கீழ் ப்ரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) போன்ற தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

புதுசா அறிமுகமான 2GB ஜியோ பிளானில் FREE ஆக 18GB டேட்டா சேர்ப்பு!

மேலும் டாக்குபே (DocuBay) எபிக்ஆன் (EpicON), சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சொய் (Hoichoi), சௌபால் (Chaupal), பிளானட் மராத்தி (Planet Marathi) மற்றும் காஞ்சா லங்கா (Kanchha Lannka) போன்ற ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும். கூடவே ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியா க்ளவுட் (Jio Cloud) ஆகியவைகளும் அணுக கிடைக்கும்.

இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதேசமயம் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் சந்தாக்கள் ஆனது 84 நாட்களுக்கு கிடைக்கும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ப்ரைம் வீடியோ மற்றும் ஜியோ சினிமா பிரீமியமின் கன்டென்ட்கள் அந்தந்த ஓடிடி இயங்குதளங்களில் கிடைக்கும். மற்ற ஓடிடி இயங்குதளங்களின் கன்டென்ட் ஜியோடிவி ஆப் வழியாக கிடைக்கும்.

எல்லாவற்றை விடவும் முக்கியமான இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் அணுக கிடைக்கிறது. இதன்கீழ் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி டேட்டா இலவசமாக கிடைக்கும். ஒட்டுமொத்தமாக "போதும் போதும்" என்கிற அளவிற்கு டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை தேடும் பயனர்களுக்கு ரூ.1198 திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Announced 18GB Bonus Data on Rs 1198 Jio Cinema Premium Plan Along With 14 OTT Platforms
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X